Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை கேவலப்படுத்தவில்லை.. ஆனால், இன்றைய ஆட்டத்தில் கனடா தான் வெல்லும்- ராயுடு கணிப்பு

மும்பை : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வாழ்வா? சாவா என்ற கட்டத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியான கனடாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பது குறித்து பேசிய ராயுடு, தாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கேவலப்படுத்தவில்லை. ஆனால் கனடா தான் வெற்றி பெறும் என்று கணித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கனடா தான் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் என நினைக்கின்றேன்.

t20 world cup babar azam indian national cricket team cricket 20 2024

பாகிஸ்தான அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது, அவர்களை யார் வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம் என்ற நிலைதான் தற்போது இருக்கின்றது நான் இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட்டை கேவலப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் தற்போது விளையாடும் விதத்தை வைத்துதான் நான் இந்த கருத்தை கூறுகின்றேன்.

பாகிஸ்தான் அணியில் பேட்டிங் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான அணி அதிரடியாகவும் ஆடவில்லை, அதேசமயம் தற்காத்தும் ஆடவில்லை. அவர்கள் பதற்றத்தில் விளையாடுகிறார்கள். பாகிஸ்தான அணி பவுண்டரி, சிக்சர் மற்றும் சிங்கிள் எடுக்க திணறுகிறார்கள். ரன்கள் எங்கே வரும் என்று தேடுகிறார்கள்.

எந்த ஒரு வீரரும் நான் ஒரு பத்து பந்தை பிடித்தால் நிச்சயம் அதில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிங்கிள் அடிப்பேன் என்று கூற முடியாது ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் பி எஸ் சாவ்லா,

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும். காரணம் பாகிஸ்தான் அணியிடம் அனுபவம் இருக்கின்றது. அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள். கனடா மிகவும் புதிய அணி. எனவே பாகிஸ்தான் வெல்லவே அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன என்று பதிலளித்தார்.

Story first published: Tuesday, June 11, 2024, 17:40 [IST]
Other articles published on Jun 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+