Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர்கள் மீது பாயும் தடை? இங்கிலாந்தை வெளியனுப்ப ஸ்காட்லாந்துடன் தோற்க பிளான்..கடும் எச்சரிக்கை

துபாய் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களம் இறங்கியுள்ள இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி பி பிரிவில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதில் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது. இதுபோன்று ஸ்காட்லாந்து அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளுடன் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

t20 world cup indian national cricket team cricket 20 2024

நமீபியா 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்து அணி ஒரு புள்ளியுடன் நான்காவது இடத்திலும் ஓமன் அணி புள்ளிகள் ஏதும் இன்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் இரண்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஐந்து புள்ளிகளை பெறுவார்கள்.

அதே சமயம் ஸ்காட்லாந்து அணி வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேண்டும் என்றே தோற்றால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

அது மட்டுமில்லாமல் உலக கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறிவிடும். இந்த நிலையில் இது குறித்து பேசிய ஆஸ்திரேலியா வீரர் ஹேசல் வுட், ஸ்காட்லாந்துக்கு எதிராக தோற்று இங்கிலாந்தை வெளியே அனுப்ப போகிறோம் என்று கிண்டலாக கூறினார். இதுதான் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்தை வெளியே அனுப்ப ஆஸ்திரேலியா வேண்டுமென்றே ஸ்காட்லாந்திடம் தோற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்றும் இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ்க்கு மூன்று போட்டிகளுக்கு தடை செய்யப்பட கூட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஐசிசி யில் இந்த அறிவிப்பால் தற்போது ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2024, 21:47 [IST]
Other articles published on Jun 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+