Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: ரோஹித்துக்கு வேட்டு.. அடுத்து கோலி.. உலகின் நம்பர் 1 இடத்தை நோக்கி பாகிஸ்தான் கேப்டன்

நியூயார்க் : பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டன் பாபர் ஆசாம், இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 4000 ரன்களை நிறைவு செய்து, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை நெருங்கி இருக்கிறார். இன்னும் 15 ரன்கள் எடுத்தால் கோலியின் அதிக ரன்கள் அடித்த டி20 பேட்ஸ்மேன் என்ற சாதனையை முறியடித்து விடுவார் பாபர் ஆசாம்.

இந்த போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவின் 3,974 ரன்களை முந்திய பாபர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். ரோஹித் சர்மாவை மூன்றாவது இடத்துக்கு தள்ளி இருக்கிறார். இருப்பினும், 51.75 என்ற சராசரியுடன் 4,037 ரன்கள் குவித்துள்ள இந்தியாவின் விராட் கோலிக்கு பின்னால் இன்னும் இரண்டாவது இடத்தில் தான் உள்ளார் பாபர் ஆசாம்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

லண்டனின் கென்னிங்டன் ஓவலில் நடந்த 4வது டி20 போட்டியில் 13 ரன்கள் எடுத்த போது கோலிக்குப் பிறகு 4000 சர்வதேச டி20 ரன்களை நிறைவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் பாபர். 107 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார் கோலி. தற்போது பாபர் அவரை விட 5 இன்னிங்ஸ்கள் அதிகமாக எடுத்துக் கொண்டு 112 இன்னிங்க்ஸ்களில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார். .

இந்தப் போட்டியில் வெறும் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இருந்தார் பாபர் ஆசாம். ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து, 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்தார். பாபர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் 119 போட்டிகளில், 112 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் பாபர், தற்போது 4023 ரன்கள் குவித்துள்ளார். 41.05 என்ற சராசரியையும், 130.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்து இருக்கிறார். மூன்று சதங்கள் மற்றும் 36 அரை சதங்கள் அடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பாபர். அவரது பெயரில் 432 பவுண்டரிகள் உள்ளன. இந்த சாதனை, அவரை டி20 கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக நிலைநிறுத்தி உள்ளது.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்:

1. விராட் கோலி - 117 போட்டிகளில் 4037 ரன்கள்
2. பாபர் ஆசாம் - 119 போட்டிகளில் 4022 ரன்கள்
3. ரோஹித் சர்மா - 151 போட்டிகளில் 3974 ரன்கள்
4. பால் ஸ்டர்லிங் - 142 போட்டிகளில் 3589 ரன்கள்
5. மார்ட்டின் குப்தில் - 122 போட்டிகளில் 3531 ரன்கள்

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன்கள் குவிக்கும் பட்சத்தில் பாபர் ஆசாம் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, May 31, 2024, 11:35 [IST]
Other articles published on May 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+