Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BAN vs AUS: டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்

ஆன்டிகுவா: 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உலக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். இதுவரை நடந்த ஒரு நாள் போட்டி மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார்.

முன்னதாக இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா 60 போட்டிகளில் 94 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் 56 விக்கெட்களும், டி20 உலக கோப்பைகளில் 38 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளிலேயே 95 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தினார். அவர் இதுவரை ஒருநாள் போட்டி உலக கோப்பைகளில் 65 விக்கெட்களும், டி20 உலக கோப்பைகளில் 30 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் இருக்கிறார். அவர் 77 போட்டிகளில் 92 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைகளில் 43 விக்கெட்களும், டி20 உலக கோப்பை போட்டிகளில் 49 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் 47 போட்டிகளில் 87 விக்கெட்கள் வீழ்த்தி இடம் பெற்றுள்ளார். அவர் ஒரு நாள் போட்டி உலக கோப்பைகளில் 53 விக்கெட்களும், டி20 உலகக் கோப்பை போட்டிகள் 34 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். ஐந்தாவது இடத்தில் முத்தையா முரளிதரன் இடம் பெற்றுள்ளார். அவர் 49 போட்டிகளில் 79 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைகளில் 68 விக்கெட்களும், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 11 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார்.

Story first published: Friday, June 21, 2024, 13:26 [IST]
Other articles published on Jun 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+