Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ஷ்டமில்லை.. ஐசிசி விதியால் தோற்ற வங்கதேசம்.. நடுவர் செய்த தவறு.. பரிதாப நிலையில் புலிக்குட்டீஸ்

நியூயார்க் : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி நடுவர் செய்த தவறு காரணமாக தோல்வியை சந்தித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. நியூயார்க் மைதானத்தில் 120 ரன்களே வெற்றி இலக்கு என்பதால், வங்கதேசம் அணி சேஸிங் செய்யுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.

t20 world cup indian national cricket team cricket david miller T20 World Cup 2024 20 2024

இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் வங்கதேசம் அணியின் தோல்விக்கு அதிர்ஷ்டமும், நடுவரின் தவறான முடிவுமே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் வங்கதேசம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால் பார்ட்மேன் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் வங்கதேசம் அணியின் மஹ்மதுல்லா காலில் அணிந்திருந்த பேடில் அடித்து பவுண்டரிக்கு சென்றது. ஆனால் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் அவுட் என்று நடுவரிடம் அப்பீல் செய்தனர். அதன்பின் உடனடியாக மஹ்மதுல்லா டிஆர்எஸ் அப்பீல் கோரினார். அப்போது 3வது நடுவர் பரிசோதனை செய்த போது, அந்த பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது வெளிப்படையாக தெரிந்தது.

இதனால் வங்கதேசம் ரசிகர்கள் பலரும் அந்த பவுண்டரி கிடைக்கவில்லை என்று தலையில் வைத்து வருத்தத்தை வெளிப்படுத்தினர். ஐசிசி விதிமுறைப்படி டிஆர்எஸ் சோதனையில் நடுவர் அவுட் என்று கூறிய பின், மீண்டும் நாட் அவுட் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த ரன்கள் சேர்க்கப்படாது. ஐபிஎல் தொடரில் எண்ணற்ற முறை இதுபோன்று நடந்துள்ளது.

இதனால் ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். தற்போது அந்த பவுண்டரி கிடைத்திருந்தால் வங்கதேசம் அணி எளிதாக வெற்றிபெற்றிருக்க முடியும். ஐசிசி-யின் தவறான விதியால் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டியில் வங்கதேசம் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

Story first published: Tuesday, June 11, 2024, 0:00 [IST]
Other articles published on Jun 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+