Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பாண்டியா சோலியை முடிக்கப் போகும் பிசிசிஐ.. டி20 உலகக்கோப்பையில் கல்தா?

மும்பை : டி20 அணியின் வருங்கால கேப்டன் என கூறப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பிசிசிஐ காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. தற்போது நடந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியாவிற்கு மாற்று வீரராக கருதப்படும் சிவம் துபேவை முக்கிய ஆல் - ரவுண்டராக பயன்படுத்தி வருவதில் பிசிசிஐ பங்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய ஆல் - ரவுண்டராக இருக்கிறார். சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக பல வீரர்கள் இந்திய அணியில் ஆட காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக ஆட இதுவரை பாண்டியாவை தவிர வேறு யாரும் அந்த இடத்துக்கு சரியாக அமையவில்லை.

T20 World Cup 2024 : BCCI keen on training Shivam Dube as replacement for Hardik Pandya

சிவம் துபே ஐபிஎல் தொடர் மற்றும் மும்பை மாநில அணிக்காக வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக ஆடி வரும் நிலையில் அவர் இதுவரை இந்திய அணியில் சரியான வாய்ப்பை பெறாமல் இருந்து வந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில், பாண்டியாவுக்கு மாற்றாக சிவம் துபே இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

அடுத்து ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பார் எனவும், அதில் தன் ஃபார்மை நிரூபித்து இந்திய டி20 அணியில் இடம் பெற்று 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், அது 100 சதவீதம் நடக்குமா? என்பது தெரியவில்லை. பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அது போன்ற காயத்தில் இருந்து மீண்டு பேட்டிங் செய்வது எளிது. ஆனால், வேகப் பந்துவீச்சாளர்கள் கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகும். அதன் பின்னும் அவர்கள் முந்தைய வேகத்தை பந்துவீச்சில் பெற கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

எனவே, 2024 டி20 உலகக்கோப்பை வரை பாண்டியாவை நம்பிக் கொண்டு இருக்காமல், அவருக்கு மாற்று வீரரை தயார் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ, சிவம் துபேவை ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பந்துவீச்சில் பயன்படுத்த வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் கூறி இருப்பதாகவும், அதனால் தான் ஆப்கானிஸ்தான் தொடரில் குறைந்தது 2 ஓவர்கள் சிவம் துபேவுக்கு ரோஹித் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் சிவம் துபே பந்து வீசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்திய அணியில் அவர் பந்து வீசியே ஆக வேண்டும் என பிசிசிஐ உறுதியாக உள்ளது.

பாண்டியா போல பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே ஆப்கானிஸ்தான் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடும் இரண்டிலும் 60 மற்றும் 63 ரன்கள் குவித்து இருந்தார். அடுத்து பந்துவீச்சில் இரண்டு போட்டிகளில் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஒரளவு பாண்டியாவுக்கு மாற்றாக தன்னை நிரூபிக்கத் துவங்கி இருக்கிறார் சிவம் துபே. இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பாண்டியா இடம் பெறுவது அவரது பந்துவீசும் திறனைப் பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.

Story first published: Tuesday, January 16, 2024, 13:12 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+