Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Bye Bye Pakistan.. தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்! வாழ்க்கை ஒரு வட்டம் டா.. 2022-ல் செய்ததற்கு பதிலடி

மும்பை : வாழ்க்கை ஒரு வட்டம் டா இங்கு ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான் என்ற தளபதி விஜய்யின் திருமலை படத்தின் வசனத்திற்கு ஏற்ப தற்போது டி20 உலக கோப்பையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

டி20 உலக கோப்பை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி இந்தியாவை காட்டிலும் வெற்றிகரமான அணியாக விளங்கி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறிவிடும் என்ற நிலையில் இருந்தது.

t20 world cup babar azam indian national cricket team cricket 20 2024

ஆனால் அப்போது அவர்களுக்கு சாதகமான பிற போட்டி முடிவுகள் அமைந்ததால் பாகிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப்போட்டி வரை சென்று இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அப்போது bye bye இந்தியா என இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் தங்களது உடைமைகளை எடுத்துச் சென்றது போல் ஒரு மீம்ஸை போட்டு கலாய்த்து வந்தனர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறி இருப்பது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்து இருக்கிறது.

இதன் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர்கள் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மீம்ஸ்- ஐ போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். Bye bye பாகிஸ்தான் என பாபர் அசாம் விமான நிலையத்திற்கு செல்வது போல் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் ரசிகர்கள் செய்த செயலுக்கு தற்போது இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி பல்வேறு தயாரிப்புகளுடன் டி20 உலக கோப்பைக்கு வந்த நிலையில் அமெரிக்கா இந்தியா போன்ற அணிகளுடன் தோல்வியை தழுவி தற்போது முதல் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரின் மிகப்பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் முதல்முறையாக அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

Story first published: Saturday, June 15, 2024, 11:18 [IST]
Other articles published on Jun 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+