Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs OMAN: 19 பந்துகளில் முடிந்த மேட்ச்.. மாபெரும் வரலாற்று வெற்றி.. ஓமனை நசுக்கிய இங்கிலாந்து

நார்த் சவுன்ட்: ஓமன் அணியை வெறும் 19 பந்துகளில் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான குரூப் பி பிரிவு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை முன்னேற்றிக் கொண்டால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. 2022 டி20 உலகக் கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்து 19 பந்துகளில் சேஸிங் செய்து அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


இந்தப் போட்டியில் ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வெறும் 47 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 13.2 ஓவர்களில் அந்த அணி 47 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் மொத்தமே நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசினார்கள். சுழற் பந்துவீச்சாளர் அதில் ரஷீத் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். வேகப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.

அடுத்து இங்கிலாந்து அணி 48 ரன்கள் என்று மிகச் சிறிய இலக்கை சேஸிங் செய்தது. விக்கெட்கள் போனாலும் அதிவிரைவாக இந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற உறுதியுடன் அந்த அணி களம் இறங்கியது. துவக்க வீரர் ஃபிலிப் சால்ட் 3 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 12 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 400 ஆக இருந்தது.

அடுத்து வந்த வில் ஜாக்ஸ் நிதானமாக ஆடினார். ஏழு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 8 பந்துகளில் 4 ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 24 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 300 ஆக இருந்தது. பேர்ஸ்டோ இரண்டு பந்துகளில் 2 ஃபோர் அடித்து 8 ரன்கள் சேர்த்தார்.

சரியாக 3.1 ஓவரில் இங்கிலாந்து அணி 50 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் பந்துகளை வீணடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கூட குறைவான பந்துகளில் இங்கிலாந்து அணி சேஸிங்கை முடித்து வெற்றி பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிக பந்துகள் மீதமுள்ள வகையில் சேஸிங் செய்து வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இங்கிலாந்து நிகழ்த்தியது. முன்னதாக இலங்கை அணி, 2014 டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை 90 பந்துகள் மீதமிருக்கும் வகையில் வீழ்த்தி இருந்தது. அந்த சாதனையை முறியடித்து உள்ளது இங்கிலாந்து.

மேலும், இந்த வெற்றியால் இங்கிலாந்தின் நெட் ரன் ரேட் தற்போது 3.081 ஆக உள்ளது. ஸ்காட்லாந்து அணியின் நெட் ரன் ரேட் 2.164 ஆகும். இங்கிலாந்து தனது கடைசி குரூப் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும். மேலும், ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைய வேண்டும். இது இரண்டும் நடந்தால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

Story first published: Friday, June 14, 2024, 9:16 [IST]
Other articles published on Jun 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+