Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு.. சிஎஸ்கே வீரருக்கு அடித்த ஜாக்பாட்.. இங்கிலாந்து அணியில் இடம்

லண்டன் : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சில ஆண்டுகளாக காயம் காரணமாக அணியில் வாய்ப்பின்றி இருந்த ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அனுபவ ஆல் - ரவுண்டரான மொயீன் அலிக்கும் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார் மொயீன் அலி. அவருக்கு 36 வயதாகும் நிலையில் டி20 அணியில் இடம் கிடைக்காது என கூறப்பட்டது. ஆனால், டி20 உலகக்கோப்பை அணியில் ஆல் -ரவுண்டராக வாய்ப்பு பெற்று இருக்கிறார் மொயீன் அலி.

T20 World Cup 2024 England and South Africa T20 World Cup 2024 squads announced

இங்கிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் இரண்டு சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்க்ஸ்டன், பில் சால்ட் உள்ளிட்ட ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் உலகக்கோப்பைக்கான டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

2024 டி20 உலகக்கோப்பை தொடரில்; பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க டி20 அணியின் கேப்டனாக எய்டன் மார்கிரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். க்விண்டன் டி காக், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ஜே, காகிசோ ரபாடா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் தென்னாப்பிரிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

2024 டி20 உலகக்கோப்பை தொடரில்; பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி :

எய்டன் மார்கிரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Story first published: Tuesday, April 30, 2024, 15:43 [IST]
Other articles published on Apr 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+