ENG vs NAM போட்டியில் செம டிவிஸ்ட்.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணிக்கு இன்றைய நாள் பல டிவிஸ்ட்களை கொடுத்திருக்கிறது. பி பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது.
இரண்டாம் இடத்தில் ஸ்காட்காலந்து இருந்தது. இதனால் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே இரண்டாவது இடத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த சூழலில் போட்டி நடந்த ஆன்டிகுவா பகுதியில் கனமழை பெய்தது. இதனால் போட்டி தடைப்படும் சூழல் உருவானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனால் இன்று போட்டி நடைபெறுமா? நடக்காதா? என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மழை கொஞ்சம் நின்று ஆடுகளம் யாருமே எதிர்பாராத வகையில் தயாரானது.
இதனால் போட்டி இந்திய நேரப்படி இரவு ஒரு மணிக்கு மேல் தொடங்கப்பட்டது. ஆட்டம் 10 ஓவராக குறைக்கப்பட டாஸ் வென்ற நமிபியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் டக் அவுட்டாக, பின் சால்ட் 11 ரன்கள் எடுத்தார். இதன் அடுத்து அதிரடி வீரர் ஜானி பாரிஸ்டோ 18 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார்.
இதில் மூன்று பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கும். இதேபோன்று இளம் வீரர் ஹாரி புரூக் 20 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே வீரர் மோயின் அலி ஆறு பந்துகளில் 16 ரன்களும், லிவிங்ஸ்டோன் நான்கு பந்துகளில் 13 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 10 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியில் தொடக்க வீரர் மைக்கேல் 33 ரன்கள் எடுக்க நிக்கோலஸ் டேவின் 18 ரன்கள் எடுத்தார். நமிபியா அணிக்காக தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய டேவிட் வீசி 12 பந்தங்களில் 27 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனால் 10 ஓவர் முடிவில் நமிபியா அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தற்போது 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications