Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது உலககோப்பை என்ற நினைப்பு இருக்கா? அமெரிக்காவில் கிரிக்கெட்டை இப்படியா பிரபலப்படுத்துவீங்க?

நியூயார்க் : அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஐசிசி சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறது. t20 கிரிக்கெட் வருகைக்குப் பிறகு பல்வேறு நாடுகள் தற்போது கிரிக்கெட் நோக்கி நகர்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக தற்போது டி20 உலக கோப்பையை ஐசிசி அங்கு பாதி போட்டிகளை நடத்துகிறது. இந்த நிலையில் இதற்காக அமெரிக்காவில் காலி மைதானத்தில் தற்காலிக ஸ்டேடியம் அமைக்கப்பட்டது.

t20 world cup indian national cricket team cricket

மேலும் பிட்சை செயற்கையான முறையில் கொண்டு வந்து ஐசிசி அங்கு அமைத்திருக்கிறது. தற்போது இந்த ஆடுகளம் தான் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறது. டி20 கிரிக்கெட் என்றால் 160- 180 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு தற்போது பொய்யாகி இருக்கிறது. நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 77 ரன்களிலும் அயர்லாந்து 96 ரன்களிலும் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

மேலும் ஆடுகளத்தில் பந்தும் எதிர்பார்க்காதபடி எகிறி வருவது வீரர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், நியூயார்க் ஆடுகளத்தை அபாயகரமானது என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த ஆடுகளும் மிகவும் புதியதாக இருக்கின்றது. .

ஆடுகளத்தில் கொஞ்சம் புற்களும் இருக்கின்றது. எனினும் சில இடங்களில் விரிசலும் தெரிகிறது. இது போன்ற புது ஆடுகளம் அமைக்கப்படும் போது இங்கு சில போட்டிகளை தற்காலிகமாக நடத்திப் பார்த்து அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டு சரி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு எப்படி ஒரு புதிய ஆப்பை டெஸ்ட் செய்து அதன் பிறகு தான் மார்க்கெட்டில் ரிலீஸ் செய்வார்கள்.

நிச்சயமாக அமெரிக்காவில் நியூ ஆப் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் டி20க்கு ஏற்ற வகையில் கிடையாது என்று அவர் குற்றச்சாட்டு இருக்கிறார்.இதை தொடர்ந்து பேசிய இர்பான் பதான், அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் டி20 உலக கோப்பையை ஐசிசி இங்கு நடத்துகிறது. ஆனால் ஆடுகளத்தை பார்த்தால் வீரர்களுக்கு பாதுகாப்பு இருப்பது போல் தெரியவில்லை.

இது போன்ற ஒரு ஆடுகளம் இந்தியாவில் இருந்தால் கண்டிப்பாக அங்கு போட்டியை நடத்தவே மாட்டார்கள். இந்த ஆடுகளம் நிச்சயமாக சரி கிடையாது. ஐசிசி உலகக் கோப்பை தொடர் இங்கு நடக்கிறது என்பதை யாரும் மறந்திட வேண்டாம். இது ஒன்றும் இருதரப்பு அணிகளுக்கிடையே ஆன தொடர் கிடையாது என்று இர்பான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Story first published: Thursday, June 6, 2024, 17:21 [IST]
Other articles published on Jun 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+