Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு மட்டும் தனி ரூல்சா? பாகிஸ்தான் பாவம் இல்லையா? ஐசிசியின் இரட்டை வேடம்?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து, நம்பியா அணிகள் மோதிய ஆட்டத்தை மழையால் ரத்து செய்யாமல் ஐசிசி விதிகளை மீறி செயல்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு போட்டிகள் மழையால் ரத்தாகி இருக்கிறது.

இதன் மூலம் பல்வேறு அணிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா கனடா அணிகள் மோதிய ஆட்டத்தில் போது மழை பெய்யவில்லை என்றாலும் ஆடுகளம் ஈரமாக இருப்பதாக கூறி போட்டியை 90 நிமிடத்திலே ஐசிசி கைவிட்டது.

Eng vs nam rain

இதேபோன்று அமெரிக்கா, அயர்லாந்து அணிக்கு எதிரான முக்கிய போட்டி மழை காரணமாக தொடங்கப்படாமல் இருந்தது. இந்தப் போட்டி தொடங்க 210 நிமிடம் வரை ஐசிசி காத்திருந்தது. அதன் பிறகு போட்டியை ரத்து செய்தது. இதனால் அமெரிக்கா அணி 5 புள்ளிகளை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதனால் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து நமீபியா மோதிய ஆட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த போட்டி மட்டும் கைவிடப்பட்டிருந்தால் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும். ஸ்காட்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.

ஆனால் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதற்காக ஐசிசி நீண்ட நேரம் காத்திருந்து போட்டியை நடத்தியது. இதற்காக விதிகளை மீறி 210 நிமிடத்திற்கு மேல் போட்டியை ரத்து செய்யாமல் ஐசிசி இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இதன் மூலம் ஆட்டம் 10 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி நமீபியாவை வீழ்த்தி தற்போது 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இந்த போட்டி மழையால் ரத்தாகி இங்கிலாந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே ஐசிசி மெனக்கெட்டு போட்டியை நடத்தியதாக ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். இதே போன்று மற்ற முக்கிய போட்டிக்கும் ஏன் ஐசிசி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணாமல் போட்டியை அவசர அவசரமாக ரத்து செய்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Sunday, June 16, 2024, 4:15 [IST]
Other articles published on Jun 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+