Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருங்க ஓய்வை அறிவித்தது.. தோல்வியால் துவண்டுவிடவில்லை.. தென்னாப்பிரிக்கா வீரர் பரபர விளக்கம்!

மும்பை: தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் ஓய்வு பெற்றுவிட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியால் துவண்டுபோன டேவிட் மில்லர், மைதானத்திலேயே கண்ணீர்விட்டு கதறினார்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது. 26 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக ஐசிசி இறுதிப்போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

t20 world cup SA vs AFG 20 2024

அப்போது களத்தில் டேவிட் மில்லர் இருந்ததால், இந்திய அணி ரசிகர்கள் பீதியில் இருந்தனர். ஏனென்றால் இதுபோன்ற சூழல்களில் டேவிட் மில்லர் ஏராளமான போட்டிகளை வெற்றிகரமான முடித்து கொடுத்துள்ளார். அதற்கேற்ப ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் பேட்டை ஓங்க, சரியாக சிக்ஸ் லைனில் சூர்யகுமார் யாதவ் அசாத்திய கேட்சை பிடித்து அசத்தினார்.

இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்கா அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. இதன்பின் மைதானத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் கண்ணீருடன் சோகத்தில் இருந்தனர். குறிப்பாக டேவிட் மில்லர் கதறி கழுது கண்ணீர் சிந்திய போது, அவரின் மனைவி கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதன்பின் இந்திய வீரர்களும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

இதனிடையே நேற்று முன் தினம் இரவு தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியை கடக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இதனால் பலரும் டேவிட் மில்லருக்கு ஆறுதல் கூறி, 2வது இன்னிங்ஸிற்கு வாழ்த்து கூறி வந்தனர்.

t20 world cup SA vs AFG 20 2024

அதுமட்டுமல்லாமல் அண்மையில் திருமணம் முடிவடைந்த சூழலில், திடீரென ஓய்வை அறிவிப்பது ஏன் என்று ரசிகர்கள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், டி20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வை அறிவிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்காக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன்.

என்னிடம் இருந்து சிறந்த ஆட்டம் இனிதான் வரப்போகிறது என்று தெரிவித்துள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்கா அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் மில்லர், 2,439 ரன்களை விளாசி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணியின் வரலாற்றில் சிறந்த ஃபினிஷராக உருவாகியுள்ள டேவிட் மில்லர், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் உள்ளார்.

Story first published: Wednesday, July 3, 2024, 8:43 [IST]
Other articles published on Jul 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+