For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினுக்கு பின்.. ராகுல் டிராவிட்-க்கு பாரத் ரத்னா மரியாதை அளிக்கப்பட வேண்டும்.. சுனில் கவாஸ்கர்!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனை பாராட்டும் வகையில் பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட்-க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடி, ஒரு முறை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது. அதேபோல் யு19 பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வென்றுள்ளார்.

india Rahul Dravid t20 world cup 20


3 ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவதற்கு முன்பாக, ராகுல் டிராவிட் யு19 இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அதேபோல் என்சிஏ-வில் தலைவராகவும் பொறுப்பில் இருந்தார். பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்ற போது, ராகுல் டிராவிட் என்சிஏ தலைவராக வந்தார். அப்போது முதல் இந்திய இளம் வீரர்களை தயார்ப்படுத்தி வந்துள்ளார்.

சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, ரவி பிஷ்னாய், அபிஷேக் சர்மா, ரியான் பராக் என்று ஏராளமான வீரர்களை உருவாக்கியுள்ளார். அதேபோல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், சிராஜ், சஞ்சு சாம்சன், விஹாரி உள்ளிட்டோரும் ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் உருவான வீரர்கள் தான்.

அந்த அளவிற்கு இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் சுனில் கவாஸ்கர், இந்திய அரசு ராகுல் டிராவிட்டுக்கு பாரத் ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாரத் ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன.

தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 2014ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 8, 2024, 11:37 [IST]
Other articles published on Jul 8, 2024
English summary
T20 World Cup 2024: Give Bharat Ratna honour to Rahul Dravid says Indian Legend Sunil Gavaskar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+