Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை வரலாற்றில் யாருமே எதிர்பார்க்காத தோல்விகள்! தப்பிக்குமா இந்தியா?

மும்பை : டி20 போட்டிகள் உலக அளவில் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் முடிவுகளை நாம் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது என்பதுதான். இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி இல்லை, ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது என்றால் நாம் நிச்சயம் இந்த அணிதான் ஜெயிக்கும் என்று முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடலாம்.

ஆனால் டி20 போட்டிகளில் அப்படி நடைபெறுவது கடினம். ஏனென்றால் 120 பந்துகள் தான் ஒரு இன்னிங்ஸ்க்கு இருக்கிறது என்பதால் அதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடைசியில் ஒரு பேட்ஸ்மேன் சிக்சர் ஆக அடித்து வெல்லவும் வைக்கலாம், இல்லை ஒரு பவுலர் யாக்கர் போட்டு கதையையே முடித்து விடலாம்.

t20 world cup ind vs ire indian national cricket team cricket

இதனால் தான் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பல கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளுக்கு சவால்களை அளிக்கின்றது. இதுவரை டி20 உலக கோப்பை வரலாற்றில் பல சிறிய அணிகள் மிகப்பெரிய ஜாம்பவான் அணிகளை தோற்கடித்து இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் யாருமே எதிர்பாராத வகையில் 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியனாக களமிறங்கிய ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது.

இதனை ஆஸ்திரேலியா ரசிகர்கள் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாமல் தடுமாறினர். இதேபோன்று 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்து அணியை நெதர்லாந்து வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதேபோன்று 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வங்கதேசம் அணி அபாரமாக வீழ்த்தி இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதேபோன்று அதைத் தொடரில் இலங்கை அணியை நமிபீய அணி வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதைப் போன்று யாருமே எதிர்பார்க்காத வகையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி கண்டது.

இப்படி பல அணிகள் பல பலமான அணிகளை கடந்த காலத்தில் வீழ்த்தி இருக்கிறார்கள். இதனால் இம்முறை கத்துக்குட்டி அணிகள் நிறைய இடம்பெறுகிறது என்பதால் பெரிய அணிகள் கொஞ்சம் கூட கவன குறைவாக விளையாட கூடாது. தற்போது இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை அயர்லாந்து எதிர்கொள்கிறது. இந்த போட்டியை இந்தியா மிகப்பெரிய போட்டியாக எண்ணினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 3, 2024, 12:24 [IST]
Other articles published on Jun 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+