For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எழுதி வச்சுக்கோங்க.. ஹர்திக் பாண்டியா சோலி முடிஞ்சுது.. முன்னாள் வீரர் அதிரடி கமென்ட்

மும்பை : இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக வாய்ப்பு இல்லை. இதை தான் எழுதிக் கூட தருகிறேன் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பங்கேற்கவில்லை. அப்போது இளம் வீரர்களுக்கு வழி விட்டு அவர்கள் ஒதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அதே சமயம், பிசிசிஐ, ஹர்திக் பாண்டியாவை டி20 அணியின் நிரந்தர கேப்டனாக்க முயற்சிகளை எடுத்து வந்தது.

T20 World Cup 2024 : Hardik Pandya can never became captain says Aakash Chopra

ஆனால், ஹர்திக் பாண்டியா 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் இடையே காயம் ஏற்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார். அவரால் ஐபிஎல் தொடர் வரை எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது என கூறப்படுகிறது. இதனிடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் தாங்கள் பங்கேற்க விரும்புவதாக ரோஹித் சர்மா, விராட் கோலி பிசிசிஐ-யிடம் தெரிவித்தனர்.

அதனால், அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்ததோடு கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது பிசிசிஐ. அதன் மூலம் டி20 அணியின் பல்வேறு திட்டங்கள் அடியோடு மாறி இருக்கிறது. முக்கியமாக பாண்டியாவின் கேப்டன்சி கேள்விக் குறியாகி இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கி இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்து உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பங்கேற்க வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. சிலர் பாண்டியா அணிக்கு திரும்பினால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் கனவு குறித்து பேசி இருக்கிறார்.

அது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ரோஹித் சர்மா தான் இப்போது டி20 அணியின் கேப்டன். அவர் உலகக்கோப்பை தொடரிலும் கேப்டனாக இருப்பார் என நான் நம்புகிறேன். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். . இதை நான் எழுதிக் கூட தருகிறேன். ரோஹித் சர்மா அணியில் இருப்பதால், பாண்டியா கேப்டன் ஆவது மிகவும் கடினம்" என்றார்.

Story first published: Tuesday, January 9, 2024, 8:19 [IST]
Other articles published on Jan 9, 2024
English summary
T20 World Cup 2024 : Hardik Pandya can never became captain once he is back says Aakash Chopra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+