For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

41 ரன்கள் தான் வித்தியாசம்.. இது மட்டும் நடந்தால், டி20 உலககோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சூப்பர் 8 பிரிவில் குரூப்1 இல் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தும் தொடரை விட்டு வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதற்கு காரணம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதுதான். இதனால், தற்போது ஆஸ்திரேலிய அணி தான் வெளியேறும் நிலையில் இருக்கின்றது.ஆனால் இந்தியாவுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

t20 world cup ind vs aus ind vs afg upset virat kohli indian national cricket team cricket 20 2024

அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். தற்போது கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். ஒருவேளை தோல்வியை தழுவினாலும் கூட இந்தியா அரை இறுதி சுற்றுக்கு செல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமாக தோற்றுவிடக்கூடாது.

அப்படியும் நடந்து விட்டால் கடைசி சூப்பர் 8 போட்டியான ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடக்கூடாது. இதனால் எந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்க கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்தியாவை எதிர் கொள்ளும் ஆஸ்திரேலியா இன்று ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

அதாவது இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில், கடைசி போட்டியில் வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
இதனால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றாலும் கூட 41 ரன்கள் வித்தியாசத்திற்குள் தோற்க வேண்டும்.

இதேபோன்று வங்கதேசத்தை, ஆப்கானிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் 81 ரன்கள் வித்தியாசம் என்பது மிகவும் அதிகம் என்பதால் இந்தியா டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் டி20 கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு குறி வைக்கும்.

Story first published: Monday, June 24, 2024, 15:06 [IST]
Other articles published on Jun 24, 2024
English summary
T20 World cup 2024- How much run difference need for australia and afghanistan to eliminate india 41 ரன்கள் தான் வித்தியாசம்.. இது மட்டும் நடந்தால், டி20 உலககோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிவிடும்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+