Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்கா முழுவதும் தலைப்புச் செய்தியில் இந்திய அணி.. டி20 உலகக்கோப்பை.. ஐசிசி போட்ட மெகா பிளான்

மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ஆடும் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் பெரிய திட்டம் தீட்டி இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரை அங்கு நடத்த ஐசிசி முதலில் முடிவு செய்தது. ஆனால், அமெரிக்க நாட்டு கிரிக்கெட் அணி மிக மோசமான நிலையில் உள்ளது. கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தும் அளவுக்கு கூட இன்னும் வளரவில்லை. எனவே, அந்த அணியை முன்னிலைப் படுத்தி மட்டுமே அமெரிக்காவில் உலகக்கோப்பை தொடரை முழுமையாக நடத்த முடியாது. எனவே, அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் குழும நாடுகளில் பாதி தொடரையும், அமெரிக்காவில் பாதி தொடரையும் நடத்த ஐசிசி முடிவு செய்தது.

T20 World Cup 2024 : ICC planned to use Indian Cricket team to popularise cricket in USA

சுமாராக ஆடும் அமெரிக்க அணியை வைத்து கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்த முடியாது. எனவே, அமெரிக்காவில் அதிக அளவில் இருக்கும் இந்தியர்களை வைத்து கிரிக்கெட்டை பிரபலமாக்க ஐசிசி திட்டமிட்டது. எனவே, இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தையும் அமெரிக்காவில் நடத்த முடிவு செய்து, இந்தியா ஆடும் லீக் சுற்றுப் போட்டிகளை அங்கே நடத்தும் வகையில் அட்டவணை தயாரித்து இருக்கிறது.

பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை இந்தியா நியூயார்க் மற்றும் ப்ளோரிடாவில் சந்திக்க உள்ளது இந்திய அணி. இதில் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண அமெரிக்காவில் இருக்கும் பல இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் வருவார்கள். அதன் மூலம் மறுநாள் அமெரிக்க ஊடகங்களில் முக்கிய விளையாட்டுச் செய்தியாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி இடம் பெறும். அதன் மூலம் பெரிய அளவில் கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலமாக்கலாம் என ஐசிசி கருதுகிறது.

இந்திய அணியின் 2024 டி20 உலகக் கோப்பை அட்டவணை:

இந்தியா vs அயர்லாந்து - ஜூன் 5 - நியூயார்க்

இந்தியா vs பாகிஸ்தான் - ஜூன் 9 - நியூயார்க்

இந்தியா vs அமெரிக்கா - ஜூன் 12 - நியூயார்க்

இந்தியா vs கனடா - ஜூன் 15 - புளோரிடா

Story first published: Friday, January 5, 2024, 20:38 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+