Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஆஸ்திரேலியா தந்த வலி இருக்கே.. உலகக்கோப்பையை விட்டே துரத்துங்க.. அப்பதான் மனசு ஆறும்

செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், அந்த அணி அத்துடன் டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்.

இந்த சூழ்நிலையில் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தியதை சுட்டிக்காட்டி அதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சூப்பர் 8 சுற்றுடன் வெளியேற்ற வேண்டும் என இந்திய ரசிகர்கள் தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்திய அணி முதல் சுற்றில் ஒன்பது போட்டிகளை வென்றது. அடுத்து அரை இறுதியில் நியூசிலாந்து அணியை வென்றது. மொத்தம் பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வென்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. அதனால், இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவரும் மனம் உடைந்து போனார்கள்.

ஓராண்டு ஆன நிலையிலும் அந்த தோல்வியை யாராலும் மறக்க முடியவில்லை. 2003 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையிலும் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும் இதேபோல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. அப்போது ஏற்பட்ட அதே வலி மற்றும் அதிர்ச்சி இப்போதும் ஏற்பட்டது.

அதனால், ஆஸ்திரேலிய அணியை கண்டாலே இந்திய ரசிகர்களுக்கு கோபம் வரும் நிலை உள்ளது. அதிலும் உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொண்டால் பல ரசிகர்களுக்கு பதற்றம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மோசமான நிலைக்கு சென்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

அடுத்த இந்தியாவிடமும் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும், ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும். எனவே. இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாக உள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையிலும், ஆஸ்திரேலிய அணியை பழி தீர்க்கும் வகையிலும் ஆஸ்திரேலியா, இந்திய அணியை சூப்பர் 8 சுற்றில் வீழ்த்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Story first published: Monday, June 24, 2024, 11:27 [IST]
Other articles published on Jun 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+