For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS: மீண்டும் 2023 உலகக்கோப்பை பைனல்? கதிகலங்க வைத்த வில்லன் ஹெட்.. போராடி வென்ற இந்தியா

செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை போராடி 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியை பறித்த வில்லன் ட்ராவிஸ் ஹெட் மீண்டும் இந்தப் போட்டியில் அதே போன்ற இன்னிங்க்ஸ் ஒன்றை ஆடினார். எனினும், தன்னம்பிக்கையுடன் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர் விராட் கோலி 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்தார். அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

T20 World Cup Ind vs Aus Indian national cricket team

அவருக்கு அடுத்து ரிஷப் பண்ட் 15, சூர்யகுமார் யாதவ் 31, சிவம் துபே 28, ஹர்திக் பாண்டியா 27 ரன்கள் குவித்தனர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.

அதன் பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னரை முதல் ஓவரிலேயே இழந்தது. அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் மிட்செல் மார்ஷ் - ட்ராவிஸ் ஹெட் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணியை பதற வைத்தனர்.

மார்ஷ் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடிய போதும் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். பும்ரா வீசிய 17வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே இந்திய அணி வீரர்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது.

அடுத்து வந்த டிம் டேவிட் 15, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Story first published: Monday, June 24, 2024, 23:51 [IST]
Other articles published on Jun 24, 2024
English summary
T20 World Cup 2024 IND vs AUS result: India beat Australia by 24 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+