நடுங்கிய சிவம் துபே கைகள்.. கடுப்பான ரோஹித்.. இந்தியா - வங்கதேசம் போட்டியில் என்ன நடந்தது?
ஆன்டிகுவா: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் சிவம் துபே 24 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். கடந்த சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் இருந்த நிலையில், இந்த போட்டியில் ரன் குவித்து அதில் இருந்து தப்பினார். அதே சமயம் சில விமர்சகர்கள் சிவம் துபே இன்னும் தனது பேட்டிங் பலவீனத்திலிருந்து வெளியே வரவில்லை என சுட்டிக்காட்டினர்.
இந்த போட்டியி; சிவம் துபே வழக்கம் போல முதலில் வீணடித்து நிதானமாக ஆடினார். 14 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவருக்கு ஷார்ட் பந்துகளை சந்திப்பதில் சிரமம் இருந்தது. அதை ஐபிஎல் தொடரின் போது அவர் சரி செய்து கொண்டார். ஆனால், தற்போது ஃபார்ம் இழந்து தடுமாறி வரும் நிலையில் மீண்டும் அவர் ஷார்ட் பந்துகளை சந்திக்க தடுமாறினார்.

ஆனால், வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் அவரின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தப்பிய சிவம் துபே, அவருக்கு வசதியான இடத்தில் பிட்ச் ஆன பந்துகளை மட்டுமே அடித்தார். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து சில அடி தூரம் முன்பே பிட்ச் ஆகி வந்த போது அவரது கைகள் நடுங்கின. அவரது தடுமாற்றமான ஆட்டத்தை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா அதிர்ச்சி அடைந்து இருந்தார்.
சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிவம் துபே எளிதாக சிக்ஸ் அடிப்பார் என்பது தெரிந்தும் வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் அவருக்கு பந்து வீசினார். 14வது ஓவரின் போது சிவம் துபே ஒரு இமாலய சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார்.
மொத்தம் மூன்று சிக்ஸ் அடித்த அவர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அந்த மூன்று சிக்ஸ் மூலம் சிவம் துபேவின் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்தது. அவரது பலவீனம் வெளியே தெரியாமல் போனது. உண்மையில் அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை தான் ஆடினார். நிறைய டாட் பால்களை ஆடி இருந்தார்.
இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. அவர் என்னதான் இன்னும் தனது பலவீனத்திலிருந்து வெளியே வரவில்லை என்றாலும், தற்போது ரன் குவித்து இருப்பதால் இனி வரும் போட்டிகளில் அவர் தன்னம்பிக்கை பெற்று அதிரடியாக ஆட வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications