Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs CAN - இன்றைய ஆட்டம் நடந்தால், இவர் தான் ஆட்டநாயகன்.. முன்னாள் வீரர் கணிப்பு

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை இன்று எதிர்கொள்கிறது.

இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் பகுதியில் நடைபெறுகிறது. எனினும் இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மைதானம் ஈரமான நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று இன்று நடைபெற இருந்த அமெரிக்கா அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் ரத்தானது.

t20 world cup indian national cricket team cricket 20 2024

இதன்மூலம் அமெரிக்காவில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இந்த சூழலில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை இன்று விளையாடுகிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நினைக்கின்றேன்.

இதற்கு காரணம் புளோரிடா ஆடுகளம் பேட்ஸ்மன்களுக்கு அபாயகரமானதாக இருக்காது என்று தெரிகிறது. இதுவே நியூயார்க் ஆடுகளமாக இருந்தால் நிச்சயமாக அனைத்து அணிகளையும் மிகவும் கவனத்துடன் எதிர் கொண்டு விளையாட வேண்டும். கனடா அணியால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நினைக்கிறேன்.

இதனால் இந்தியா இன்றைய ஆட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெறும். இன்றைய ஆட்டம் நடந்தால் நிச்சயம் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்று நான் நினைக்கின்றேன். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் ரன் குவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். பந்துவீச்சில் குல்தீப் இன்று விளையாடினால் நிச்சயம் மூன்று விக்கெட் எடுப்பார் என்று தோன்றுகிறது.

இதேபோன்று ஜடேஜாவும் ஃபார்முக்கு திரும்பி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கலக்குவார் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கின்றது. இதேபோன்று ஜடேஜாவை இன்று பேட்டிங்கில் கொஞ்சம் முன்னரே களமிறக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். சிவம் துபேவும் இழந்த பார்மை மீட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சன் அணியில் இடம் கிடைக்காதா என்று பலரும் கேட்கிறார்கள். அவரை அணியில் சேர்த்தால் எந்த இடத்தில் விளையாட வைப்பீர்கள். ஆறாவது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடினால் அது நிச்சயம் அவருக்கு சரியான இடமாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Saturday, June 15, 2024, 13:34 [IST]
Other articles published on Jun 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+