For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரலாற்றிலேயே இல்லாத சரிவை சந்தித்த விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்களால் வந்த வினை.. திருந்துமா பிசிசிஐ?

ஃப்ளோரிடா: விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்விலேயே மிக மோசமான நிலையில் இருக்கிறார். இதுவரை அவர் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்ததே இல்லை. ஆனால், தற்போது டி20 உலகக் கோப்பையில் அந்த மோசமான சாதனையை அவர் செய்து இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் கடைசி போட்டியில் ஆடிய விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார். அதுவே சர்வதேச டி20 போட்டியில் விராட் கோலியின் முதல் டக் அவுட் ஆகும்.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

அதன் பின் ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். ஆனால், மீண்டும் சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்ற கோலி, 2024 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். கடைசியாக நடந்த அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார். இதை அடுத்து தொடர்ந்து நான்கு சர்வதேச இன்னிங்க்ஸ்களில் அவர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி இருக்கிறார்.

விராட் கோலியின் இந்த மோசமான நிலைக்கு காரணம் அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடி வருவது தான் என விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தனது கிரிக்கெட் வாழ்வில் சர்வதேச போட்டிகளில் பெரும்பாலும் மூன்றாம் வரிசை வீரராகவே விராட் கோலி ஆடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரராக அவர் விளையாடி வருகிறார்.

அதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் அதிக ரன் குவித்து வருவதை சுட்டிக்காட்டிய ஆர்சிபி ரசிகர்கள், அதேபோலவே இந்திய அணியும் விராட் கோலியை துவக்க வீரராக ஆட வைத்தால் அதிக ரன்கள் குவிப்பார் என பல ஆண்டுகளாகவே கூறி வருகின்றனர். கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் பேட்டிங்கில் விமர்சனம் எழுந்தது. அவர் அதிக ரன் குவித்த போதும் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்கள் இருந்தன.

அப்போதும் விராட் கோலியை துவக்க வீரராக ஆட வைத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் அதிக அளவில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதே கருத்துக்களை முன்னாள் வீரர்களும் கூறத் துவங்கினர். ஒரு கட்டத்தில் பிசிசிஐ-யும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

ஏனெனில், விராட் கோலியை மீண்டும் மூன்றாம் வரிசையில் ஆட வைத்து அவரால் ரன் குவிக்க முடியாமல் போனாலோ அல்லது இந்திய அணி தோல்வி அடைந்தாலோ அப்போது கடுமையான விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதன் காரணமாகவே பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் சமூக ஊடக நிர்பந்தத்திற்கு ஆளாகி விராட் கோலியை துவக்க வீரராக ஆட வைத்து இருக்கிறார்கள். அதுவே, அவரது இந்த மோசமான ஃபார்முக்கு காரணம் என கூறப்படுகிறது. சூப்பர் 8 சுற்றிலாவது விராட் கோலி தனது ஃபார்மை மீட்பரா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Story first published: Friday, June 14, 2024, 23:40 [IST]
Other articles published on Jun 14, 2024
English summary
T20 World Cup 2024 IND vs CAN: Virat Kohli is under scanner due to RCB fans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+