For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: இந்தியா செய்த இந்த வேலையால் தான் தோற்றோம்.. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

கயானா: இந்தியா மட்டும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தப் போட்டியின் அபார வெற்றியை அடுத்து இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டிக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டார். அப்போது இந்திய அணி தாங்கள் எதிர்பார்த்ததை விட 20 ரன்கள் அதிகமாக எடுத்ததாகவும், அவர்களிடம் சிறந்த சுழற் பந்து வீச்சாளர்கள் இருந்தனர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

T20 World Cup IND vs ENG Cricket

இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பும்ரா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அவர்களது சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவே இங்கிலாந்து அணி வீழ்ந்ததாக ஜோஸ் பட்லர் கூறி இருக்கிறார்.

இது குறித்து ஜோஸ் பட்லர் பேசுகையில், "இந்தியா ஒட்டுமொத்தமாக எங்களைத் தாண்டி சிறப்பாக விளையாடியது. நாங்கள் அவர்களை 20 முதல் 25 இடங்களுக்கு கூடுதலாக எடுக்க விட்டுவிட்டோம். இந்த பிட்ச் மிகவும் சவாலானது. இந்திய அணி இந்த வெற்றிக்கு உரியவர்கள். இந்த போட்டியின் போது மழை வந்து கொண்டிருந்ததால் போட்டி சூழ்நிலை மாறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அப்படி மாறவும் இல்லை. இந்திய அணி எங்களை பந்து வீச்சில் முற்றிலுமாக வீழ்த்தியது. இந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தாலும் அது இந்த போட்டியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். எங்கள் அணியின் அதில் ரஷித் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் என 2 ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான் மொயீன் அலியை கூடுதலாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அதிக ஸ்கோர் எடுத்ததுடன், சிறந்த பந்துவீச்சை வைத்து எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள்" என்றார்.

Story first published: Friday, June 28, 2024, 7:15 [IST]
Other articles published on Jun 28, 2024
English summary
T20 World Cup 2024 IND vs ENG: England captain Jos Buttler reveals the reason for loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+