Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: டாஸ் போடுவதில் தாமதம்.. மழையால் போட்டி கைவிடப்படுமா? ஐசிசி விதிகள் என்ன?

கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருந்த இரண்டாவது இறுதிப் போட்டி மழையால் தாமதமானது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மழையின் காரணமாக அப்போது டாஸ் போடப்படவில்லை. மேலும், மழையால் ஆடுகளத்தில் ஆங்காங்கே நீர் அதிகமாக இருந்ததால் அம்பயர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இரு அணி கேப்டன்களிடமும் பேசினர். பின்னர், இந்த போட்டி நடைபெறும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும். இந்த அரை இறுதிப் போட்டியை மாலை 6.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்திய நேரப்படி 8.50க்கு டாஸ் போடப்பட்டது. 9.15 மணிக்கு போட்டி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

T20 World Cup IND vs ENG Cricket

இது அரை இறுதி போட்டி என்பதால் இந்தப் போட்டிக்கு கூடுதல் நேரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அரை இறுதியில் இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 10 ஓவர்கள் ஆடியிருக்க வேண்டும். அப்போது தான் மழையால் போட்டி கைவிடப்பட்டாலும் டிஎல்எஸ் முறைப்படி போட்டியில் முடிவு அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏதேனும் ஒரு அணி 10 ஓவர்களுக்கும் குறைவாக ஆடி இருந்தாலும் அப்போது மழையால் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டால் டிஎல்எஸ் முறையை செயல்படுத்த முடியாது என ஐசிசி விதிமுறை வகுத்துள்ளது. எனவே, அந்த சூழ்நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். எனவே, மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் குறைந்தபட்சம் இரு அணிகளும் 10 ஓவர்கள் பேட்டிங் செய்யும் வகையிலேயே ஓவர்கள் குறைக்கப்படும்.

தற்போதைய சூழலில் இந்தப் போட்டியின் இடையே கடுமையாக மழை பெய்து ஆடுகளத்தில் மழை நீர் அதிகமாக தேங்கினால் போட்டி கைவிடப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் சூப்பர் 8 சுற்றில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.

Story first published: Thursday, June 27, 2024, 20:27 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+