Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய கிரிக்கெட்டில் எந்த ஓப்பனரும் செய்யாததை செய்த "கிங்" கோலி.. படுமோசமான ரெக்கார்டு

கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மிக மோசமான டி20 உலகக் கோப்பை சாதனையை செய்துள்ளார். இதுவரை டி20 உலகக் கோப்பையில் ஆடிய துவக்க வீரர்களில் மோசமான சராசரி வைத்திருக்கும் மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனையை செய்துள்ளார் அவர்.

அந்த அளவுக்கு அவரது செயல்பாடு 2024 உலகக் கோப்பையில் பரிதாபமாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ஒரு சிக்ஸ் அடித்த நிலையில், 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முன்பு இந்த உலகக்கோப்பை தொடரில் 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர் தற்போது ஏழு போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 10.71 மட்டுமே ஆகும்.

T20 World Cup IND vs ENG Cricket

இதன் மூலம் ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் துவக்க வீரராக மிகக் குறைந்த பேட்டிங் சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலில் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார். இதில் குறைந்தபட்சம் ஐந்து இன்னிங்ஸ்களில் ஆடிய துவக்க வீரர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

அந்த வகையில் வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார் 2016 டி20 உலக கோப்பையில் 9.6 பேட்டிங் சராசரி வைத்திருந்தார். அடுத்து 2022 இல் ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் வெஸ்லி 9.8 பேட்டிங் சராசரி வைத்திருந்தார். அந்த இரண்டு வீரர்களுக்கு அடுத்து 2024 டி20 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 75 ரன்கள் எடுத்த விராட் கோலி 10.71 பேட்டிங் சராசரி உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடிய இந்திய துவக்க வீரர்களிலேயே படுமோசமான பேட்டிங் சராசரி கொண்ட வீரராகவும் மாறி இருக்கிறார் விராட் கோலி.

அந்த அளவுக்கு அவரது நிலைமை படுமோசமாக மாறி உள்ளது. கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 136.5 ஆகும். 2014 டி20 உலகக் கோப்பையில் அவரது பேட்டிங் சராசரி 106 ஆகும். 2022 இல் அவரது சராசரி 98.66 ஆகும். டி20 உலக கோப்பைகளில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட பட்டியலில் முதல் நான்கு இடங்களில், மூன்றில் விராட் கோலி உடைய உலகக்கோப்பை செயல்பாடுகள் உள்ளன. ஆனால், அதே விராட் கோலி தற்போது துவக்க வீரராக ஃபார்ம் இழந்து காணப்படுகிறார்.

Story first published: Thursday, June 27, 2024, 23:51 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+