IND vs IRE: "டி20 கிங்".. 7 மெகா சாதனைகள்! ஒரே மேட்ச்சில் ஏழு வரலாற்று சாதனைகளை உடைத்த ரோஹித் சர்மா
நியூயார்க் : அயர்லாந்து அணிக்கு எதிரான 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஏழு முக்கிய சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளார்.
இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதிய குரூப் ஏ பிரிவு போட்டி நியூயார்க் நகரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி சேசிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் திணறிய அயர்லாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரன் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4026 ரன்கள் அடித்து, பாபர் அசாமை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும், டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா.
இந்த போட்டியில் அவர் மூன்று சிக்ஸ் அடித்திருந்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் செய்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதாவது விராட் கோலி மற்றும் பாபர் அசாமை விட மிகக் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.
அது அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி மட்டுமே அந்த சாதனையை செய்திருந்தார். மேலும், இந்திய அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறார். முன்பு தோனி இந்திய அணியின் கேப்டனாக 42 வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், ரோஹித் சர்மா 43 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து கேப்டனாக சாதனை படைத்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
600* - ரோஹித் சர்மா (இந்தியா)
553 - கிறிஸ் கெய்ல் (மேற்கு இந்தியத் தீவுகள்)
476 - ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)
398 - பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்
1142 ரன்கள் (26 இன்னிங்ஸ்) - விராட் கோலி (இந்தியா)
1016 ரன்கள் (31 இன்னிங்ஸ்) - மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை)
1015* ரன்கள் (37 இன்னிங்ஸ்) - ரோஹித் சர்மா (இந்தியா)
965 ரன்கள் (31 இன்னிங்ஸ்) - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) )
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் (ஆண்கள்)
4038 ரன்கள் - விராட் கோலி (110 இன்னிங்ஸ்)
4026 ரன்கள் - ரோஹித் சர்மா (144 இன்னிங்ஸ்)
4023 ரன்கள் - பாபர் ஆசம் (112 இன்னிங்ஸ்)
குறைந்த பந்துகளில் 4000 சர்வதேச டி20 ரன்கள்
ரோஹித் சர்மா - 2860
விராட் கோலி - 3000
பாபர் ஆசம் - 3079


Click it and Unblock the Notifications