டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி சொதப்பி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் புறநகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்ததால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அயர்லாந்த அணி 96 ரன்களில் சுருண்டது. இதனை எடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக தான் களமிறங்கினார். இதனால் டி20 உலக கோப்பையிலும் விராட் கோலிக்கு தொடக்க வீரர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் விராட் கோலி தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆங்கர் ரோல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கத்துக்குட்டி அணிகளான அயர்லாந்துக்கு எதிராக கூட விராட் கோலி ரன் எடுக்காமல் சொதப்பினார். ஐந்து பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் ஆனார். இது விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. விராட் கோலி எப்போதுமே இந்திய அணிக்காக மூன்றாவது இடத்தில் தான் விளையாடுவார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதில் விராட் கோலி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ரசிகர்களை சோதனைக்கு ஆளாக்கினார். ஏற்கனவே விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்திருந்த சுரேஷ் ரெய்னா கோலி எப்போதும் மூன்றாவது வீரராக தான் விளையாடுவார்.
அவருடைய இடத்தை மாற்ற வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது அதேபோல் கோலி ஆட்டம் இழந்து விட்டார். இந்த நிலையில் விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில் தற்போது தான் முதல் முறையாக இந்த தொடரில் விளையாடுகிறார். பயிற்சியில் அவர் இடம்பெறாதது இந்த சொதப்பலுக்கு காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சொதப்பலுக்கு காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.