For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 வரலாற்றிலேயே பிரம்மாண்ட சாதனையை செய்த இந்திய அணி.. மிகக் குறைந்த ஸ்கோரை வைத்து வெற்றி

நியூயார்க் : சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்து இருக்கிறது. அதுவும் தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் வைத்து இந்த சாதனையை செய்திருப்பது மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெறும் 119 ரன்கள் அடித்திருந்த இந்திய அணி 120 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த குறைந்த இலக்கை தற்காத்து வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

T20 World Cup 2024 IND vs PAK record Lowest total defended by India in T20I

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி மிகக் குறைந்த ஸ்கோரை தற்காத்து பெற்ற வெற்றிகளின் வரிசையில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 139 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தற்காத்து இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

அதுவே இந்திய அணி தற்காத்துக் கொண்ட மிக குறைந்த ஸ்கோர் ஆகும். அந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்து உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது இந்திய அணியால் வெற்றி பெற முடியாது என்று பலரும் எண்ணினர். ஆனால், பும்ராவின் அபார பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி நிலை குலைந்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மேலும் சில சாதனைகளை செய்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் மிகக்குறைந்த ஸ்கோரை தற்காத்துக் வென்ற அணிகளின் வரிசையில் முதல் இடத்தை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை தற்காத்து வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணிகளின் வரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. டி20 உலக கோப்பை தொடர்களில் இதுவரை பாகிஸ்தான அணியை ஏழு முறை இந்திய அணி வீழ்த்தி உள்ளது.

Story first published: Monday, June 10, 2024, 6:15 [IST]
Other articles published on Jun 10, 2024
English summary
T20 World Cup 2024 IND vs PAK record: Lowest total defended by India in T20I
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+