Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: இனி சாமி தான் காப்பாத்தணும்.. படுமோசமான பிட்ச்சில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி

நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நியூயார்க் நகரில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நாசா கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக இங்கே நடந்த சில போட்டிகளில் பிட்ச் குறித்த விமர்சனம் எழுந்தது. இந்த மைதானத்தில் இருக்கும் பிட்ச்சுகள் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கிறது என்றாலும் பந்து பிட்ச்சில் பட்டவுடன் இரண்டு விதமான வேகத்தில் மேலே எழுந்தது. இது போன்ற இரட்டை வேகம் கொண்ட பிட்ச்களை மோசமான பிட்ச் என்றுதான் பேட்ஸ்மேன்கள் வர்ணிப்பார்கள். அதேபோல இந்த மைதானத்தின் பிட்ச்சுகளும் மோசமான பேச்சாளர் கருதப்படுகிறது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து உறுதி அளித்தது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும். பிட்ச்சை தங்களால் இயன்றவரை சரி செய்வோம் என கூறியிருந்தனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் எந்த பிட்ச் பயன்படுத்தப்பட்டதோ அதே பிட்ச்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கும் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங்கில் தடுமாறின. நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த தென்னாபிரிக்கா அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. இதை எடுத்து இந்த பிட்ச் மோசமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இதே பிட்ச்சில் தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Saturday, June 8, 2024, 23:26 [IST]
Other articles published on Jun 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+