Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஹர்திக் பாண்டியா செய்த செயல்.. இந்திய அணிக்கு அடிச்ச லக்.. இப்படி கூடவா யோசிப்பீங்க?

பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வெல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதிலேயே ஒரு அணி போட்டிக்கு முன்பு இருந்து ஆதிக்கம் செலுத்த முடியும். டாஸில் தோல்வியடைந்த எதிரணி ஆட்டம் தொடங்கும் முன்பே மனதளவில் ஒரு சிறிய சோர்வை சந்திக்கும். இந்த நிலையில் இந்திய அணி டாஸ் வெல்வதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா தான் என சில ரசிகர்கள் வேடிக்கையாக கூறி வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியாவை வட இந்தியாவில் "சாப்ரி" என சில ரசிகர்கள் மோசமான வகையில் அழைப்பதுண்டு. நம் ஊரில் வித்தியாசமான அலங்காரம் செய்து கொள்ளும் நபர்களை "புள்ளிங்கோ" என அழைப்பது போல, வட இந்தியாவில் அதுபோன்ற நபர்களை சாப்ரி என அழைக்கிறார்கள். அங்கு அது ஒரு மோசமான சொல்லாக உள்ளது. சிலர் ஹர்திக் பாண்டியாவை அந்த வார்த்தையை சொல்லித் தான் அழைத்து வந்தார்கள்.

T20 World Cup IND vs SA

அதற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியாவின் வித விதமான ஹேர் ஸ்டைல், மற்றும் உடல் மொழி ஆகியவைதான். 2024 ஐபிஎல் தொடரின் போதும் அவரை அந்த வார்த்தையை வைத்து தான் திட்டி வந்தனர். ஆனால், உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் அவர் தனது ஹேர் ஸ்டைலில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

இப்போது பார்ப்பதற்கு கல்யாணம் மாப்பிள்ளை போல தோற்றத்தில் இருக்கிறார். அவரது நவீன ஹேர் ஸ்டைல் பாணியை பின்பற்றாமல் தெளிவான தோற்றத்தில் இருக்கிறார். இதை அடுத்து ரசிகர்கள் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது தோற்றத்தை மாற்றியதால் தான் இந்திய அணி டாஸ் வென்றது. அதனால் தான் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. என ரசிகர்கள் வேடிக்கையாக கூறி வருகின்றனர். இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 29, 2024, 20:02 [IST]
Other articles published on Jun 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+