Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 2024 டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கப் போவது இந்த டீம் தான்.. பாகிஸ்தான் வீரர் ஆச்சர்ய கணிப்பு

பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை வெல்லும் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்

அவர் இந்திய அணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என கூறியதோடு நிற்காமல் இந்திய அணிக்கு வெற்றி வாழ்த்தையும் சேர்த்து கூறியிருக்கிறார். இது பற்றி சோயப் அக்தர் பேசுகையில், "இந்திய அணி உலக கோப்பை வெல்ல தகுதி உள்ள அணி என்று நான் நினைக்கிறேன். அந்த அணிக்கு எனது வாழ்த்துக்கள். நான் நீண்ட காலமாக இதைத்தான் சொல்லி வருகிறேன். அவர்கள் கடந்த இரண்டு உலக கோப்பைகளிலேயே வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது அது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் சோயப் அக்தர்.

T20 World Cup IND vs SA Cricket

மேலும், தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் வகையில் சில பதிவுகளை வெளியிட்டார். "தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றால் அவர்கள் நிச்சயமாக முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது அவர்களுக்கு ஒரு சிறிய முன்னிலை கிடைக்கும். தென்னாபிரிக்க அணி இப்போதுதான் முதல் முறையாக ஒரு இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அவர்களின் நிச்சயம் பயந்த நிலையில் தான் இருப்பார்கள். இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் யார் ரன் குவிக்கப் போகிறார்கள்? எனவே, இந்திய அணி தான் நிச்சயம் இறுதி போட்டியில் வெல்லும்" என சோயப் அக்தர் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை புகழ்ந்து இருந்தால் அவர் ரோஹித் சர்மா பற்றி பேசிய போது, "ரோஹித் சர்மா தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த வந்திருக்கிறேன் எனவும், உலகக் கோப்பை வெல்ல வந்திருப்பதாகவும் கூறுகிறார் கூறினார். உலகக் கோப்பை வெல்ல தகுதியுடைய அணி. ரோஹித் சர்மா மிகப்பெரிய வீரர். அவர் இந்த தொடரை விட்டு விலகும் போது மிகப்பெரிய அளவில் தனது முத்திரையை பதித்து செல்வார் என எதிர்பார்க்கலாம். அவர் சுயநலமே இல்லாத கேப்டன். அணிக்காக விளையாடும் வீரர். ஒரு முழுமையான பேட்ஸ்மேன்" என புகழ்ந்து தள்ளினார் சோயப் அக்தர்.

Story first published: Friday, June 28, 2024, 23:04 [IST]
Other articles published on Jun 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+