Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA Final: டி20 உலகக்கோப்பையை இரண்டு முறை வென்ற அணிகள் எவை? சாதனையை சமன் செய்த இந்தியா

பிரிட்ஜ்டவுன்: இதுவரை டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற அணிகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவதாக இணைந்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியை அடுத்து 2007 டி20 உலகக் கோப்பைக்கு பின் சுமார் 17 ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை இரண்டு முறை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றது இந்திய அணி.

T20 World Cup IND vs SA 20 2024

இதுவரை டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறை வென்று இருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா மூன்றாவதாக இணைந்துள்ளது. 2012 மற்றும் 2016 டி20 உலக கோப்பை தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று இருந்தது. 2010 மற்றும் 2022 உலகக் கோப்பைகளை இங்கிலாந்து அணி வென்று இருந்தது.

இதை அடுத்து இந்தியா 2007 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. இந்த மூன்று அணிகளை தவிர்த்து பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகிய அணிகள் தலா ஒரு முறை டி20 உலக கோப்பையை வென்று உள்ளன. இதுவரை மொத்தம் ஆறு அணிகள் மட்டுமே டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பைகளை வென்றுள்ளது.

இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பைகளை வென்ற அணிகள் :

2007 - இந்தியா
2009 - பாகிஸ்தான்
2010 - இங்கிலாந்து
2012 - வெஸ்ட் இண்டீஸ்
2014 - இலங்கை
2016 - வெஸ்ட் இண்டீஸ்
2021 - ஆஸ்திரேலியா
2022 - இங்கிலாந்து
2024 - இந்தியா

Story first published: Sunday, June 30, 2024, 11:03 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+