Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - தோல்வியே சந்திக்காத 2 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி.. இரு அணிகளும் கடந்து வந்த பாதை

பார்படாஸ் : 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த தொடரை இரண்டு அணிகளுமே தோல்வியே தழுவாமல் இறுதி போட்டியில் பல பரிட்சை நடத்துகிறது.

இதன் மூலம் இரண்டு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அபாரமாக செயல்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளும் இந்த தொடரில் கடந்து வந்த பாதையில் தற்போது பார்க்கலாம். இந்திய அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்து முதல் போட்டியில் அயர்லாந்து அணியை 96 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெறும் 119 ரன்களை அடித்து பாகிஸ்தானை தோற்கடித்தது.

t20 world cup ind vs eng

மூன்றாவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி கனடாவிற்கு எதிரான போட்டியில் மழையால் ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா தகுதி பெற்றது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் குவித்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 196 ரன்கள் குவித்து 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 ரன்கள் குவித்த இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதை அடுத்து அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டு இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இதேபோன்று தென்னாப்பிரிக்கா அணி குரூப் டி பிரிவில் தங்களுடைய முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 77 ரன்களில் சுருட்டி வென்றது. இதை அடுத்து நெதர்லாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 104 ரன்கள் என்ற இலக்கை தட்டு தடுமாறு துரத்தி வென்றது.

இதே போன்று வங்கதேசத்துக்கு எதிராக 114 ரன்கள் என்ற இலக்கை தக்க வைக்கப் போராடிய தென் ஆப்பிரிக்கா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று பரபரப்பான ஆட்டத்தில் நேபாளை எதிர்கொண்டது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைப் போன்ற சூப்பர் 8 பிரிவில் அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா அணி அந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. இதை போன்று இங்கிலாந்துக்கு எதிராக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் எதிராக போராடி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எனினும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்கள் எல்லாம் சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இந்தியாவை காட்டிலும் சில போட்டிகளில் தென்னாப்பிரிக்கா போராடி தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அந்த அணியின் பேட்டிங் பெரிய அளவில் இன்னும் கிளிக் ஆகவில்லை.

Story first published: Friday, June 28, 2024, 8:06 [IST]
Other articles published on Jun 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+