Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை- இந்திய அணி சூப்பர் 8-க்கு சென்றால் யாருடன் மோதும்? 3 அணிகளுமே ஆபத்து தான்

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் இரண்டாம் தேதி முதல் தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கிறது. 5 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகளாக இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.

t20 world cup indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் லீக் சுற்றில் இந்திய அணி அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் போன்ற கத்துக்குட்டி அணிகளை மட்டுமே எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்கும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்திய அணி சென்றால் எந்தெந்த அணியுடன் மோத போகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டி20 உலக கோப்பையில் அனைத்து அணிகளுமே பல அதிர்ச்சி வைத்தியங்களை சந்திக்கும் என்பதால் ஒவ்வொரு சுற்றுக்கும் முன்னேறுவது என்பது சவாலான காரியமாக இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி 2009, 2010, 2012, 2021 ஆகிய தொடர்களில் அரையிறுதி சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் சூப்பர் 8 சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறி இருக்கிறது.

அப்படி என்றால் அந்த அளவுக்கு சூப்பர் 8 சுற்று மிகவும் கடினமாக இருக்கும். இதுவரை நடைபெற்ற எட்டு தொடரில் இந்திய அணி 2007, 2014, 2016, 2022 என 4 முறை தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் யார் யாரை எதிர்கொள்கிறது என்று பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது.

ஏனென்றால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, ஐசிசி தொடரில் நமக்கு ஏழாம் பொருத்தமாக இருக்கும் நியூசிலாந்து மற்றும் பலம் வாய்ந்த இலங்கை அல்லது தென்னாப்பிரிக்கா என மூன்று அணிகளை இந்தியா எதிர்கொள்ளும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் இலங்கையை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தாலும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இதனால் லீக் சுற்றும் முடிவடைந்த பிறகு ஒவ்வொரு போட்டியுமே இந்தியாவுக்கு மிகவும் நெருக்கடி நிறைந்த போட்டியாக இருக்கும். இதன் காரணமாக இந்த தொடர் ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Story first published: Monday, June 3, 2024, 13:24 [IST]
Other articles published on Jun 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+