Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா இன்று வென்றால், அரையிறுதி உறுதி.. ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் சிக்கல் இல்லை.. எப்படி?

மும்பை : டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று சூப்பர் 8 சுற்றில் மிக முக்கியமான ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது. யார் செய்த புண்ணியமோ இம்முறை இந்தியாவுக்கு மிகவும் எளிதான சுற்றுகள் அமைந்திருக்கிறது.

குரூப் சுற்றில் அமெரிக்கா, கனடா அயர்லாந்து, பாகிஸ்தான் என மொக்கை அணிகளை எதிர்கொண்ட இந்தியா தோல்வியை தழுவாமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர் 8 பிரிவிலும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என இரண்டு பலம் குன்றிய அணிகள் மற்றும் ஆஸ்திரேலியா என முன்னாள் சாம்பியன் உடன் இந்தியா களமிறங்குகிறது.

t20 world cup ind vs ban indian national cricket team cricket 20 2024

சூப்பர் 8 சுற்று பிரிவில் இந்தியா அணி வங்கதேசம் ஆப்கானிஸ்தான் என இரண்டு அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்றாலே அரையிறுதி சுற்று உறுதியாகிவிடும். காரணம் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு உண்டு என்ற நிலை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் ஆப்கானிஸ்தானும் வங்கதேசமும் ஒரு போட்டியில் மோதிக் கொள்வார்கள்.

இதில் யார் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 2 புள்ளிகள் தான் பெற முடியும். இதேபோன்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் வங்கதேச அணியால் அதிகபட்சமாக 2 புள்ளிகளில் பெற முடியும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தினால் நான்கு புள்ளிகள் உடன் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடலாம். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒருவேளை தோற்று வங்கதேசத்துக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா ஆஸ்திரேலியா போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும்.

இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். இந்தியா தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் நாம் அரை இறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி, நாளைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தினால் இந்தியா தன்னுடைய கடைசி போட்டியில் வெற்றி பெறாமலேயே அரை இறுதி சுற்றுக்கு சென்று விடலாம் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டியது.

Story first published: Saturday, June 22, 2024, 18:04 [IST]
Other articles published on Jun 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+