Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான சூப்பர் 8 ஆட்டம்..இந்தியா 2வது பேட்டிங் செய்தால் தான் கோப்பை கிடைக்கும்! காரணம் என்ன

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்களுடைய கடைசி சூப்பர் 8 ஆட்டத்தை வரும் திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்று விட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இந்த சூழ்நிலையில் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும்.

t20 world cup ind vs ban hardik pandya virat kohli indian national cricket team cricket

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்தியா அரையிறுதிக்கு சென்று விடும் என்ற பட்சத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி எந்த ஒரு பயனையும் யாருக்கும் கொடுக்காது. ஆனால் இந்த போட்டியை இந்தியா ஒரு சிறந்த பயிற்சியாக மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றால் முதலில் பந்து வீச வேண்டும்.

ஏனென்றால் இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பெரும்பாலும் முதலிலேயே பேட்டிங் செய்திருக்கிறது. இதனால் சேஸிங் செய்யும் போது ஆடுகளம் தோய்வாக இருந்தால் அதில் எப்படி விளையாட வேண்டும் என்பது இந்திய அணிக்கு பரீட்சயம் இல்லாமல் இருக்கலாம்.தோய்வான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா போன்ற பல வாய்ந்த அணிக்கு எதிராக இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்தால் வீரர்களின் உத்வேகம் பெரிய அளவு அதிகரிக்கும்.

மேலும் சேஸிங் செய்யும் போது நமது குறை என்ன? நிறை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.இதனால் அரை இறுதி அல்லது இறுதிப் போட்டி போன்ற நாக் அவுட் போட்டியில் இந்திய அணிக்கு சேஸ் செய்யும் ஒரு சூழல் வந்தால், அப்போது முழித்துக் கொண்டு நிற்காமல் தைரியமாக இந்திய அணியால் விளையாட முடியும்.

இதனால் ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா டாசை வென்று சேஸ் செய்ய வேண்டும். மேலும் இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே இரு அணிகளும் சூப்பர்8 பிரிவில் மோதினால், அது ஒரு நல்ல பயிற்சியாக இரு அணிக்குமே இருக்கும்.

Story first published: Sunday, June 23, 2024, 9:01 [IST]
Other articles published on Jun 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+