மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய சுற்றான சூப்பர் 8 போட்டிகள் வரும் 19ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்தச் சுற்றில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் வரும் இருபதாம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் பார்படாஸ் நகரில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஓய்வு நாளாக இருந்ததால் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இணைந்து வாலிபால் விளையாடினார்கள்.

இந்த சூழலில் இன்று பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட், பும்ரா ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்தனர். இந்த நிலையில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் பார்மில் இல்லாமல் தவித்து வருகின்றனர்.சூப்பர் 8 சுற்றில் ஒட்டுமொத்தமாகவே விராட் கோலி ஐந்து ரன்கள் தான் அடித்திருந்தார்.
மேலும் ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இருவரும் இன்று தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள். முதலில் ஹர்திக் பாண்டியா, விராட் கோலிக்கும் ஜடேஜாவுக்கும் பந்து வீசிக்கொண்டு இருந்தார். இந்த சூழலில் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி அவர் ஆப் சைடில் அடித்து தான் ஆட்டம் இழந்தார்.
இதனால் லெப்ட் சைடு ஷாட்கள் ஆடி ரன்கள் சேர்க்கும் முயற்சியில் விராட் கோலி ஈடுபட்டார். இதற்காக ஃபுல் ஷாட் மற்றும் புல்ஷாட் போன்ற பயிற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பும்ரா விராட் கோலிக்கு பந்து வீச தொடங்கினார். அப்போது பும்ரா என் பந்தை அடித்து பாருங்கள் என்று கூறி இருக்கிறார்.
அதற்கு விராட் கோலி சிரித்துக்கொண்டே பேட்டிங்கில் நின்று இருக்கிறார். அப்போது பும்ரா வீசிய பந்தை விராட் கோலி ஒரு புல் ஷாட் ஆடி அதனை பவுண்டரிக்கு விரட்டி இருக்கிறார். இதனை அடுத்து விராட் கோலி பும்ராவை பார்த்து சிரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பன்ட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சை அவர் எதிர்கொண்டு ரன்கள் அடித்தார்.