For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த ஓராண்டு இந்திய அணி ஆடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் பட்டியல்.. முழு விவரம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஓராண்டுக்கு விளையாடப் போகும் கிரிக்கெட் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி வீரர்கள் ஜூன் மாதத்தில் துவங்கி, 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்தெந்த அணிகளுடன் கிரிக்கெட் தொடர்களில் மோதப் போகிறது என்பது குறித்த பட்டியல் தான் இது.

T20 World Cup Indian national cricket team Cricket 20 2024


ஜூன் 5ஆம் தேதி முதல் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. அதற்கு அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

அடுத்து ஜூலை கடைசி வாரம் மற்றும் ஆகஸ்ட் துவக்கத்தில் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோத உள்ளது.

அடுத்து செப்டம்பர் மாதத்தில் வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது. அதற்கடுத்து அக்டோபரில் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளது.

நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி இரண்டாவது வாரம் வரை ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முக்கியமான தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி. அதன் பின் ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி துவக்கத்தில் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் மோத உள்ளது. அடுத்து மார்ச் மாதத்தில் 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்த கிரிக்கெட் தொடர்கள் எல்லாம் ஆடி முடிக்கும்போது சரியாக 2025 ஐபிஎல் தொடர் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதை அடுத்து இந்திய அணி ஓய்வின்றி அடுத்த 10 மாதங்களுக்கு தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Story first published: Wednesday, May 29, 2024, 23:29 [IST]
Other articles published on May 29, 2024
English summary
T20 World Cup 2024: Indian cricket team schedule until IPL 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+