For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா ஏமாற்றி தான் ஜெயிக்கிறாங்க.. ஐசிசி விசாரிக்கணும்.. வயிற்று எரிச்சலில் பொங்கும் பாகிஸ்தான்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு போட்டியில் கூட நடப்பு தொடரில் தோற்காமல் அரை இறுதி வரை முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா ஏமாற்றி தான் வெற்றி பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் குற்றம் சாட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் அணி கடந்த டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்து இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் பாகிஸ்தான் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சி அடைத்தனர்.

t20 world cup india pakistan

இதனால் பாகிஸ்தானில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதி வரை முன்னேறி இருப்பதை பாகிஸ்தான் அணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக் ஆகியோர் இந்திய அணி ஏமாற்றி தான் வெற்றி பெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்சாமம் உல் ஹக், முழு பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் தான் அடித்து இருந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. 88 ரன்கள் எடுக்கும் போதுதான் ஐந்து விக்கெட் இழந்தது. ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. இதற்கு காரணம் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்தது.

இந்திய வீரர் ஆர்ஸ்தீப் பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பணியை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும். இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று அவர் குற்றச்சாட்டு இருக்கிறார். ஆர்ஸ்தீப் சிங் 15 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் ஒன்பது ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது. முன்பு போல் பந்தை சேதப்படுத்தினால் அதனை ஈசியாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தற்போது இருக்கின்றது. மைதானத்தை சுற்றி 360 டிகிரி கேமரா கோணங்கள் இருக்கும் நிலையில் பந்தை சேதப்படுத்துவது என்பது முடியாத காரியம்.இதனால் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்று எரிச்சலில் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, June 25, 2024, 23:39 [IST]
Other articles published on Jun 25, 2024
English summary
T20 World cup 2024- Indian players tampering the ball is the reason for win says Pakistan Ex cricketers இந்தியா ஏமாற்றி தான் ஜெய்க்கிறாங்க.. ஐசிசி விசாரிக்கனும்.. வயிற்று எரிச்சலில் பொங்கும் பாகிஸ்தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+