Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை மட்டும் நம்பினால், வேலைக்கே ஆகாது.. இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த ஜாம்பவான்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நடப்பு தொடரில் தோல்வியைத் தழுவாமல் விளையாடி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பந்து வீச்சில் பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருவது தான். பல்வேறு போட்டியில் பும்ரா தனி ஆளாக நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்.

நடப்பு தொடரில் பும்ரா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 3.42 என்று எக்னாமியை தான் வைத்திருக்கிறார். இந்திய அணியில் ஆர்ஸ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பும்ரா தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கிறார்.

t20 world cup ind vs aus virat kohli indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கார்ட்லி ஆம்ப்ரோஸ், நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், மற்ற பவுலர்களை விட பும்ரா கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறார். நான் அவர்களின் தீவிர ரசிகனாக இருக்கின்றேன்.

அவர் எப்போதெல்லாம் பந்து வீசுகிறாரோ, அதை நான் பார்க்க ஆவலுடன் காத்திருப்பேன். ஏனென்றால் வழக்கத்திற்கு மாறாக அவர் செயல்படுகிறார். பாரம்பரிய முறையில் பந்து வீசும் டெக்னிக்கை பும்ரா உடைத்துவிட்டார். ஓடி வந்து வீசும் போது அவர் ஏதோ நடந்து வந்து வீசுவது போல் தான் தெரிகிறது. அவர் எப்படி வேண்டுமானாலும் வீசட்டும் ஆனால் அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் பல நல்ல செயல்பாடுகளை செய்கிறார். பும்ராவால் வேகமாகவும் பந்து வீச முடியும். அதே சமயம் பந்தை ஸ்விங் செய்யவும் முடியும். அதே சமயம் பும்ராவை மட்டுமே நம்பி இந்திய அணி இருக்கக்கூடாது. பும்ரா திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், இது ஒரு அணி விளையாட்டு. பும்ராவால் மட்டும் தனியாக நின்று எதையும் செய்ய முடியாது.

பும்ரா சிறப்பாக செயல்பட்டு மற்ற பவுலர்கள் சொதப்பினால் நிச்சயம் அணிக்கு வெற்றி கிடைக்காது. இதேபோன்று பேட்ஸ்மேன்களும் சரியாக ரன் அடிக்கவில்லை என்றால் நிச்சயம் இந்தியா தோற்கும். ஒரு அணியின் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனியாக நின்று முக்கியமான பங்கை வெற்றிக்கு ஆற்றுவார்கள். ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். ரிஷப் பண்ட், விராட் கோலி ஆகியோர் அபாயகரமான வீரராக உள்ளனர். என்னை பொறுத்தவரை இந்திய அணி சரியான சமநிலையில் இருக்கின்றது.

Story first published: Monday, June 24, 2024, 15:40 [IST]
Other articles published on Jun 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+