லண்டன் : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் வெளியேறிய நிலையில் தற்போது அந்த அணியின் ஸ்டார் வீரர்களை பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி இருக்கிறார்.
மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், மொத்தமாகவே 91 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 104. இதே போன்று மற்றொரு நட்சத்திர வீரரான முகமது ரிஸ்வான் 93 ரன்கள் தான் அடித்திருக்கிறார் அதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 88 ஆகும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வெளியேறியது குறித்து முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருக்கிறார். அதை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணி நிச்சியமாக வானிலையை குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அப்படி பெரும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி கண்டிப்பாக தகுதி பெற்று இருக்கும். பாகிஸ்தான் அணி வெள்ளை நிற கிரிக்கெட்டில் ஒரு சிறந்த அணியே கிடையாது. கடைசி டி20 உலக கோப்பை தொடரில் அவர்கள் இறுதிப் போட்டி வரை சென்றிருந்தாலும் கூட பாகிஸ்தான் அணி ஒரு சிறந்த அணி என்று நான் சொல்லவே மாட்டேன்.
பாகிஸ்தான் அணியால் என்ன செய்ய முடியுமோ அதை தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே கூறியிருந்தேன், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி நிச்சயம் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியால் முன்பை போல் அதிரடியாக விளையாடக் கூடிய திறமை உடைய வீரர்கள் இல்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியில் சிறந்த t20 கிரிக்கெட் வீரர்கள் கிடையாது. பாபர் அசாம் நிச்சயம் திறமையான வீரம் தான். ஆனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் டி20 போன்ற அணிகளில் பாபர் அசாமால் இடம் பிடிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்று தான் நான் கூறுவேன். இந்தியாவை எப்படி வீழ்த்துவது என்று மனதளவில் பாகிஸ்தானுக்கு சுத்தமாக தெரியவில்லை.
120 ரன்கள் என்ற இலக்கை கூட பாகிஸ்தான் அணியால் ஷேஸ் செய்ய முடியவில்லை. அந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்தப் போட்டியில் ஒரு அணி தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய அணி இது போன்ற போட்டிகளில் எப்படி விளையாடி வெற்றிய பெற வேண்டும் என்று தெரிந்திருப்பதால்,அவர்கள் மனதளவில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றனர். இந்தியாவை போல் பாகிஸ்தான் அணியால் அப்படி திறம்பட செயல்பட முடியவில்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.