Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை 2024- அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் யார்?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த நான்கு வாரமாக ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த இந்த தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட், அதிக சிக்ஸர்கள் எடுத்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவர் எட்டு போட்டிகளில் விளையாடி 281 ரன்கள் அடித்திருக்கிறார்.

t20 world cup ind vs sa virat kohli

இதில் மூன்று அரைசதம் அடங்கும். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். இவர் எட்டு போட்டுகளில் விளையாடி 257 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று அரை சதம் அடங்கும். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹெட் 255 ரன்கள் அடித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் குயிண்டன் டி காக் 243 ரன்களும் ஐந்தாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹீம் சார்ட்ரன் 231 ரன்கள் அடித்தும் உள்ளார்.

இதேபோன்று அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் பரூக்கி இருக்கிறார். இவர் எட்டு போட்டிகளில் விளையாடி 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதை போன்று இந்தியாவின் ஆர்ஸ்தீப் சிங் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தை பகிர்ந்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் பும்ரா 8 போட்டியில் விளையாடி 15 விக்கெட்களையும், தென்னாப்பிரிக்கா வீரர் நோக்கியா 9 போட்டிகளில் விளையாடி 15 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் எட்டு போட்டியில் விளையாடி 16 கேட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். நடப்பு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் 17 சிக்சர் அடித்து முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 16 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் ,ஆஸ்திரேலியா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மூன்றாவது இடத்தில் 15 சிக்ஸர்கள் இருக்கிறார்கள்.அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐட்டம் மார்க்கரம் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 8 கேட்ச் பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், இங்கிலாந்து வீரர் ஹாரி புருக், தென் ஆப்பிரிக்காவில் ஸ்டப்ஸ் ஆகியோர் 7 கேட்ச் பிடித்து இரண்டாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Story first published: Sunday, June 30, 2024, 7:03 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+