Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி டூ விராட் கோலி.. 3 ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார்? பாவம் சச்சின் டெண்டுல்கர்!

மும்பை: 11 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக இந்தியா தனது 6வது ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

1983 உலகக்கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை என்று 6 ஐசிசி கோப்பைகளை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. கபில் தேவ், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி ஆகியோருக்கு பின் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

t20 world cup IND vs SA

இதில் 2002 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால், இந்தியா - இலங்கை அணிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்களில் அதிக முறை ஐசிசி கோப்பையை வென்ற வீரர்கள் யார் என்ற தேடல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதன்படி 5 வீரர்கள் 3 முறை ஐசிசி கோப்பையை வென்றுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளார். அதேபோல் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங் 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

யுவராஜ் சிங் விளையாடிய அதே 3 தொடர்களில் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் விளையாடி 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர். அதேபோல் விராட் கோலி 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை ஆகிய 3 ஐசிசி கோப்பையை வென்றுள்ளார்.

இறுதியாக ரோகித் சர்மா 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளார். கிரிக்கெட் கடவுள் என்று கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் 2 ஐசிசி கோப்பையை மட்டுமே வென்றுள்ளார். இந்திய அணிக்காக எண்ணற்ற வீரர்கள் விளையாடி இருந்தாலும், இதுவரை 6 வீரர்கள் மட்டுமே 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 3, 2024, 19:57 [IST]
Other articles published on Jul 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+