Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை 2024.. கம்மின்ஸ் கேப்டன் இல்லையாம்.. இளம் வீரரை கேப்டனாக்கிய ஆஸ்திரேலியா அணி!

சிட்னி : டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 1 முதல் மே 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கிறது. இதற்கு தயாராகும் பட்சத்தில் மே 1ஆம் தேதியன்று 20 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வாரியங்களும், டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

T20 World Cup 2024 No place for Steve and McGurk and Mitchell Marsh appointed as a captain of Australian team

இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக பல்வேறு நாடுகளின் அணிகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு போஸ்டர் அறிவிப்புடன் நிறுத்திக் கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், இம்முறை புதிய வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா வீரர்களை கொண்டு டி20 உலகக்கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மறைந்த வீரர் சைமண்ட்ஸ்-க்கு பதிலாக அவரின் குழந்தைகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஷ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த மிட்சல் மார்ஷ், அதன்பின் பல்வேறு சமயங்களில் ஆஸ்திரேலியா டி20 அணியை வழிநடத்தி வந்தார். இருப்பினும் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் இன்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மிட்சல் மார்ஷை கேப்டனாக நியமித்துள்ளது.

அதேபோல் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இளம் வீரர் மெக்கர்க் இருவரும் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக டேவிட் வார்னர், மேத்யூ வேட், ட்ராவிஸ் ஹெட், இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், கம்மின்ஸ், அகர், டிம் டேவிட், நேதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஹேசல்வுட், ஸ்டார்க் மற்றும் சாம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Story first published: Wednesday, May 1, 2024, 8:54 [IST]
Other articles published on May 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+