Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NZ vs PNG: சோகத்துடன் விடை பெற்ற நியூசிலாந்து.. கத்துக்குட்டி அணியை கதற விட்டு ஆறுதல் வெற்றி

டரூபா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் சோகமாக வெளியேறியது நியூசிலாந்து அணி. குரூப் சுற்றில் தனது கடைசி போட்டியில் கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக விளையாடியது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

பப்புவா நியூ கினியா அணியின் பேட்ஸ்மேன்களால் நியூசிலாந்து அணியின் மின்னல் வேக பந்துவீச்சாளர்களை எதிர்த்து ரன் குவிக்க முடியவில்லை. எனினும், அவர்கள் டெஸ்ட் போட்டி போல விக்கெட்டுகளை தற்காத்து ஆட முயன்றனர். 19.4 ஓவர்களை வரை தாக்குப் பிடித்து 78 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

T20 World Cup 2024 NZ vs PNG New Zealand beat Papua New Guinea

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் சிறப்பாக பந்து வீசி தான் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசினார். அதாவது அவரது நான்கு ஓவர்களிலும் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை. மேலும், மூன்று விக்கெட்களும் வீழ்த்தினார்.

அடுத்து நியூசிலாந்து அணி 79 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிதானமாக துரத்தியது. முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஃபின் ஆலன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதற்கு மேல் பப்புவா நியூ கினியா அணியால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. துவக்க வீரர் டெவான் கான்வே 32 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணைந்து நிதானமாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கேன் வில்லியம்சன் 18 ரன்களும், டேரில் மிட்செல் 19 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது நியூசிலாந்து.

இதன் மூலம் குரூப் சி பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து குரூப் சுற்றுடன் வெளியேறியது நியூசிலாந்து அணி. இதே குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அந்த இரண்டு அணிகளும் நியூசிலாந்த அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி கத்துக்குட்டி அணிகளான உகாண்டா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரண்டு அணிகளை மட்டுமே வீழ்த்தி ஆறுதல் வெற்றிகளை பெற்று இந்த உலகக்கோப்பையில் இருந்து விடை பெற்றது.

Story first published: Tuesday, June 18, 2024, 0:59 [IST]
Other articles published on Jun 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+