Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்காரு பாய்ஸை மிரள வைத்த ஓமன் அணி.. ஒரு வீரரால் மாறிய ஆட்டம்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஆஸ்திரேலியா

பார்படாஸ் : ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி போராடி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் 10வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி கேப்டன் இலியாஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், கேப்டன் மிட்சல் மார்ஷ் 14 ரன்களிலும், மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

t20 world cup indian national cricket team cricket

இதனால் ஆஸ்திரேலியா அணி 8.3 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த டேவிட் வார்னர் - ஸ்டாய்னிஸ் கூட்டணி ஆஸ்திரேலியா அணியை மீட்டெடுத்தது. வார்னர் 51 பந்துகளில் 56 ரன்களும், ஸ்டாய்னிஸ் 36 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய ஓமன் அணி 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் திடீரென ஓமன் அணியின் அயான் கான் - மெஹ்ரன் கான் இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஓமன் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கண்மூடி திறப்பதற்கு ஓமன் அணி 100 ரன்களை கடந்த நிலையில், அதிரடியாக விளையாடிய அயான் கான் 36 ரன்களிலும், மெஹ்ரன் கான் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக ஓமன் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பேட்டிங்கின் போது எப்படி ஸ்டாய்னிஸ் 36 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 67 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை காப்பாற்றினாரோ, அதேபோல் பவுலிங்கிலும் ஸ்டார்க் காயம் காரணமாக ஓய்வறை செல்ல, மீண்டும் ஸ்டாய்னிஸ் தான் காப்பாற்றினார்.

3 ஓவர்களை வீசிய ஸ்டாய்னிஸ் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் அரைசதம் விளாசியதோடு பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையையும் ஸ்டாய்னிஸ் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக டுவைன் பிராவோ மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Story first published: Thursday, June 6, 2024, 11:54 [IST]
Other articles published on Jun 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+