Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன டா நடக்குது! 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த பாகிஸ்தான்.. அலறவிட்ட அமெரிக்கா.. காப்பாற்றிய பாபர்

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை அமெரிக்க பவுலர் அலறி விட்டிருக்கிறார்கள். கடந்த இரண்டாம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் குரூப் ஏ வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை இன்று தான் எதிர் கொண்டிருக்கிறது. போட்டியை நடத்தும் அமெரிக்காவை பாகிஸ்தான் எதிர்கொண்டு விளையாடுகிறது.

icc t20 world cup babar azam mohammed rizwan pakistan cricket team 20

அமெரிக்கா பாகிஸ்தான் அணியை என்ன செய்து விடப் போகிறது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் அமெரிக்க அணியின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் சுக்கு நூறாக உடைக்க போகிறார்கள். பெரிய இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இன்று சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. அமெரிக்கா வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக அமெரிக்க வீரர்களின் பில்டிங் இன்று சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 9 ரன்களிலும் உஸ்மான் கான் மூன்று ரன்களிலும் பக்கர சமான் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை பாகிஸ்தான் அணி ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. இதனை அடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் சதாப்கான் ஜோடி பாகிஸ்தான அணியை சர்வில் இருந்து மீட்க போராடியது. நிதானமாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இறுதியில் இப்திகார் 18 ரன்களும், ஷாகின் ஆப்ரிடி 23 ரன்களும் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் அணியை சமாளிக்க அமெரிக்க வீரர்கள் சிறப்பான யுக்தியை கையாண்டு வருவதாக முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் வசிம் அக்ரம் பாராட்டி இருக்கிறார்.பாகிஸ்தான் அணியின் வலது கை பேட்ஸ்மேன்கள் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தடுமாறுவார்கள் என்பதை அறிந்து கொண்டு இரண்டு வீரர்களை அமெரிக்கா பயன்படுத்திருப்பதாக வசிம் அகரம் பாராட்டி இருக்கிறார்.

Story first published: Thursday, June 6, 2024, 22:02 [IST]
Other articles published on Jun 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+