Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சாமி இவன்? பாகிஸ்தான் மானத்தை வாங்கும் கிரிக்கெட் வீரர்.. பேட்டை வைத்து செய்த காரியம்- வீடியோ

லாகூர் : பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசாம் கான் ரசிகர்கள் மத்தியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். 25 வயதான அசாம் கான் பாகிஸ்தான் அணிக்காக 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 88 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 30 ரன்கள் தான்.

இந்த நிலையில் அசாம் கான் டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்ற அசாம் கான் பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியதோடு மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கில் அழகான கேட்ச் ஒன்றை தவறவிட்டார்.

t20 world cup pakistan cricket team babar azam cricket 20 2024

இதற்கு அசாம் கானின் உடல் பருமன் தான் காரணம் என்று ரசிகர்கள் கடுமையாக சாடி வந்தனர். அது மட்டுமல்லாமல் நெப்போட்டிசம் எனப்படும் வம்சாவளியை ஊக்குவிக்கும் முறையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடைப்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மோயின் கானின் மகன் தான் அசாம் கான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அசாம் கான் உடல் தகுதியை நிரூபிக்காமலேயே அணியில் சேர்ந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பயிற்சியின் போது அசாம் கான் செய்த காரியம் ரசிகர்கள் முகத்தை சுளிக்க வைத்தது. பொதுவாக கிரிக்கெட் பேட்டை பலரும் மதிப்பார்கள். இந்த சூழலில் அசாம் கான் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது பேட்டை வைத்து முதுகை சொரிந்து இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முதுகு அரிக்கிறது என்றால் சொரிவதில் தவறில்லை.ஆனால் அசாம் கான் தனது பேட்டை வைத்து சுமார் ஐந்து நிமிடம் வரை முதுகை தேய்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அசாம் கான் பாகிஸ்தானின் மானத்தை வாங்குவதாக கடுமையாக சாடி இருக்கிறார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணியில் இருந்து அசாம் கானை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தாக்கப்படுவதால், அசாம் கான் மனம் உடைந்து இருக்கிறார். இதன் காரணமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து புகைப்படத்தையும் பதிவையும் அசாம் கான் நீக்கியிருக்கிறார். மேலும் மனம் உடைந்து இருக்கும் அசாம் கானை, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Story first published: Monday, June 3, 2024, 12:41 [IST]
Other articles published on Jun 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+