Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை விட 5 ஆண்டுகளாக பாக், அணியில் சேர்க்கப்படாத இவர் தான் பெஸ்ட்.. கம்ரான் அக்மல் பேச்சு

மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்க்கப்படாத ஒரு வீரரை ஒப்பிட்டு விராட் கோலியின் புள்ளி விவரங்களை குறித்து பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பேசியிருப்பது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துள்ளது.

t20 world cup babar azam pakistan shaheen afridi indian national cricket team cricket 20 2024

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரன் அக்மல் தன்னுடைய சகோதரர் உமர் அக்மல்,சிறப்பாக விளையாடி வந்த நிலையிலும் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.இது குறித்து பேசிய அவர் தமது சகோதரர் விராட் கோலி விட சிறந்த புள்ளி விவரங்களை டி20 உலக கோப்பையில் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் எனக்கு நேற்று ஒரு புள்ளிவிபரம் வந்தது. அதில் உமர் அக்மல் குறித்து நான் சில கருத்தை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
விராட் கோலியை விட புள்ளி விவரங்களில் உமர் அக்மல் தான் சிறந்து விளங்குகிறார். செயல்பாடுகள் என்று பார்த்தோம் என்றால் விராட் கோலி அருகே கூட உமர் அக்மலால் வர முடியவில்லை.

ஆனால் விராட் கோலி விட அதிக ஸ்ட்ரைக் ரேட், அதிக ரன்கள் ஆகியவற்றை உமர் அக்மல் டி20 உலக கோப்பையில் வைத்திருக்கிறார் என்று கூறினார்.
உமர் அக்மல் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரை போய் கோலியுடன் தொடர்பு படுத்தலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அவர் சொன்ன புள்ளிவிவரத்தில் சில உண்மையும் இருக்கின்றது.

விராட் கோலி டி20 உலக கோப்பையில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 130 என்ற அளவில் இருக்கின்றது. ஆனால் டி20 உலக கோப்பையில் உமர் அக்மலின் ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் உள்ளது. விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் டி20 உலக கோப்பையில் 83 ரன்கள் ஆகும். ஆனால் உமர் அக்மாரின் அதிகபட்ச ஸ்கோர் 94 ரன்கள் ஆகும். இப்படி உமர் அக்மல் சமீப காலமாக நன்றாக விளையாடி வந்து உடல் தகுதியை நிரூபித்து இருந்தாலும், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 15, 2024, 14:59 [IST]
Other articles published on Jun 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+